உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் மேக்பீஸ் தாக்கரே

விக்கிமேற்கோள் இலிருந்து

வில்லியம் மேக்பீஸ் தாக்கரே (18 சூலை 1811 - 24 டதிசம்பர் 1863) ஒரு பிரிட்த்தானிய புதின எழுத்தாளராவார்

மேற்கோள்கள்

  • அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன.[1]
  • நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும்.[2]
  • சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.[3]
  • தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும்.[4]
  • வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.[5]

குறிப்புகள்

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.