உள்ளடக்கத்துக்குச் செல்

லினக்சு கருனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லினக்ஸ் கரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Linux
டக்ஸ் பென்குயின்

லினக்சு கரு 3.0.0 ஆரம்பமாகிறது
விருத்தியாளர் மற்றும் சில ஆயிரம் பங்களிப்பளார்கள்
இயங்குதளக்
குடும்பம்
யூனிக்சு குடும்பம்
முதல் வெளியீடு 1991
கிடைக்கும் மொழிகள் ஆங்கிலம்
அனுமதி குனூ பதிப்பு 2[1]
வலைத்தளம் www.kernel.org

லினக்ஸ் என்பது திறந்த ஆணைமூல இயக்குதளமான குனூ/லினக்சின் (GNU/Linux) அடிப்படை மென்பொருளான கருனி இனது பெயராகும். லினக்ஸ் கருனி என்பது, கணினி ஒன்று இயங்கத்தேவையான மிக அடிப்படை மென்பொருளான கருனிகளில் புகழ்பெற்ற ஒன்றாகும். இம்மென்பொருள் லினஸ் டோர்வால்ஸ் என்பவரது முயற்சியால் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது உலகம் எங்கும் பரந்திருக்கும் வல்லுனர்களால் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது.

பொதுவான பயன்பாட்டில் லினக்சு என்ற சொல் குனூ/இலினக்சு (GNU/Linux) இயக்குதளத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு லினக்சு என்று பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.

இது முதன் முதலில் இது இன்டெல் 80386 என்ற நுண்செயலிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது மற்ற பணித்தளங்களிலும் வேலை செய்யும். அது சி மொழி மற்றும் குனூ சி மொழியின் நீட்சியின் உதவியோடும் கட்டமைப்பு மொழி (assembly language) உதவியோடும் எழுதப்பட்டதாகும்.

இது குனூ பொது காப்புரிமம் (GNU General Public License) எனப்படும் காப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டவை. அதனால் லினக்ஸின் மூல நிரல் காப்புரிமை அற்றதாகும்.

கருனி என்பது சிறந்து விளங்கும் குனூ/லினக்ஸ் இயக்க அமைப்பின் மூலநிரல் மென்பொருளாகும். லினக்ஸ் கருனியானது திறந்த ஆணைமூலமாக கிடைக்கிறது. குனூ/லினக்ஸ் இயக்குதளமானது லினக்ஸ் கருனியைக் கொண்டிருக்கிறது.

காப்புரிமை ஆவணங்கள்

முதன்முதலில், டோர்வோல்டு அவர்கள், லினக்ஸை, எந்த ஒரு வர்த்தகமும் தன் வசப்படுத்திக்கொள்ளாதவாறு அதன் காப்புரிமையை அமைத்துள்ளார். பின்னர் ஜி.என்.யு ஜன்ரல் புப்ளிக் காப்புரிமைக்கு (பாகம் 2) மாற்றப்பட்டது. இந்த ஆவணங்கள், லினக்ஸ் தொகுப்பை பரிமாறிகொள்ளவும் மற்றும் அதனை மாற்றம் செய்ததை விற்கவும் வழிசெய்கிறது. அவ்வாறு செய்யப்படும் லினக்ஸ் தொகுப்பு, அதன் சோர்ஸ் கோடையையும் சேர்த்து இதெ காப்புரிமையின் கீழ் வெளியிடப்பட வேண்டும்.

திரு. டோர்வோல்டு அவர்கள், லினக்ஸின் ஜி.பி.எல் காப்புரிமைப் பற்றி பேசும்பொழுது, "best thing I ever did." என்று வர்ணித்துள்ளார்.

சின்னம்

வியட்நாம் நாட்டு பாணியில் டக்ஸ்

லினக்ஸின் சின்னம் டக்ஸ் (TUX) எனப் பெயரிடப்பட்ட பென்குயின் பறவையாகும். இச்சின்னத்தை உருவாக்கியவர் அமெரிக்காவை சேர்ந்த நிரலாளர் இலாரி இவிங்.

டக்ஸின் உருவம் பல மாறுபட்ட வடிவங்களில் காணப்படுகிறது, சில தோற்றங்கள் முப்பரிமாண வடிவிலும் உள்ளன. லினக்சின் சின்னம் ஏன் பென்குயின் பறவை என்பதற்கு லினசு டோர்வால்டுசின் பதில் "லினசிற்கு பென்குயின் பிடிக்கும், அவ்வளவே".

டக்ஸ் எனப்பெயர் வர காரணம் ஆங்கிலத்தில் டோர்வால்ட்சின் லினக்ஸ் (Torvalds' LinUX) என்பதன் சுருக்கமென கருதப்படுகிறது.

குறிப்புகள்

  1. InfoWorld. "Linux creator Torvalds still no fan of GPLv3". பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லினக்சு_கருனி&oldid=4047775" இலிருந்து மீள்விக்கப்பட்டது