உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்தளைக் கலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாத்தளை கிளர்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாத்தளையில் வீர புரன் அப்புவுக்கு நினைவுச் சின்னம்

1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானியக் குடியேற்ற அரசிற்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது.

1848 கலகத்துக்கான காரணிகள்

[தொகு]
  • கோல்புறூக் விதந்துரைப்புக்களால் உள்நாட்டு மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டமை.
  • இராஜகாரிய முறை ஒழிப்பால் விவசாயம் புறக்கணிக்கப்பட்டமை.
  • 1846 முடிக்குரிய காணிச்சட்டத்தினால் (பெருந்தோட்டங்களுக்கு சார்பாக அமைந்த அதே நேரம்) உள்நாட்டு மக்கள் தமது நிலத்தினை இழந்தமை.
  • உள்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட புதியவரிகள்: (உதாரணமாக: நாய்வரி, பாதைவரி, கடைவரி, படகுவரி, மனிதவரி போன்றன) இந்த வரிகள் மக்களுக்கு சுமையாக இருந்தமை.
  • தாழ்நில சிங்களவர் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தமை
  • பௌத்தமதம் புறக்கணிக்கப்பட்டமை (உதாரணமாக: தலதா மாளிகைக்கு வழங்கப்பட்ட நன்கொடை நிறுத்தப்பட்டது)

கலகத்தின் போக்கு

[தொகு]

தலைமை

[தொகு]

கலகத்துக்கு கொங்கல கொடபண்டா, வீரபுரன் அப்பு, குபாபொல தேரர்[1] ஆகியோர் தலைமை தாங்கினர்.

அடக்கப்பட்ட முறை

[தொகு]
  • போராட்டம் முறையாக ஒழுங்கு படுத்தப்படாமை
  • மலைநாட்டுப்பிரதானிகளின் ஆதரவு கிடைக்காமை
  • பிரித்தானிய தேசாதிபதி டொரிங்டன் அக்கலகத்தை அரசாங்கத்துக்கு எதிரான கலகம் எனக் கருதியமையால் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்.
  • தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கலகம் அடக்கப்பட்டது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. ஆண்டு 9 சரித்திரப் பாடநூல்

உசாத்துணை

[தொகு]
  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998