உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செர்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்
Organisation européenne
pour la recherche nucléaire
உருவாக்கம்29 செப்டம்பர் 1954[1]
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
21 உறுப்பு நாடுகளும் 7 பார்வையாளர்களும்
தலைமை இயக்குநர்
ரோல்ஃப் டயடர் ஹெயர்
வலைத்தளம்cern.ch
[செர்ன்: உலகளாவிய வலை தோன்றிய இடம்[2]
1954ஆம் ஆண்டில் இந்த ஆய்வு மையத்தை நிறுவிய 12 உறுப்பு நாடுகள் a[›] (வரைபட எல்லைகள் 1989படி)
நிறுவப்பட்டு 54 ஆண்டுகள் கடந்தநிலையில் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் 20 நாடுகளாக உயர்ந்துள்ளது.இவற்றில் 18 ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களுமாவர்.

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research, பிரெஞ்சு மொழி: Organisation européenne pour la recherche nucléaire), பரவலாக CERN (/[invalid input: 'icon']ˈsɜːrn/; பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛʁn]), உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் (46°14′3″N 6°3′19″E / 46.23417°N 6.05528°E / 46.23417; 6.05528) ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். 1954ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

செர்ன் என்ற சொல்லாட்சி 2400 முழுநேர பணியாளர்களைக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைக் குறிப்பதோடன்றி 608 பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் பணியாற்றும் 113 நாட்டினர்களடங்கிய 7931 அறிவியலாளர்களையும் குறிக்கும்.

செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான துகள் முடுக்கிகளையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. உலகளாவிய வலையின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.

செர்ன் மையங்கள். பன்னாட்டு வசதிகளாக, சுவிஸ் அல்லது பிரெஞ்சு அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நிறுவனத்திற்கு 2008ஆம் ஆண்டில் உறுப்பு நாடுகள் CHF 1 பில்லியன் (ஏறத்தாழ € 664 மில்லியன்) வழங்கியுள்ளன.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CERN.ch". Public.web.cern.ch. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  2. வார்ப்புரு:Openplaque

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
CERN
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Wikipedia books