கடலடிச் சமவெளி
கடலடிச் சமவெளி (Abyssal plain) கிடை மட்டமாக அல்லது மிகக் குறைந்த சரிவுடன் காணப்படும் கடலுக்கு அடியில் உள்ள தரை ஆகும். இவை புவியில் உள்ள கூடிய சமதளமாகவும், வழுவழுப்பாகவும் அமைந்த பகுதிகளுள் அடங்கும். இப் பகுதிகள் மிகக் குறைவாகவே ஆராயப் பட்டுள்ளன. ஏறத்தாள 40% கடல் தரையை உள்ளடக்கியுள்ள இக் கடலடிச் சமவெளிகள் 2,200 தொடக்கம் 5,500 மீட்டர்கள் வரையான ஆழத்தை எட்டுகின்றன. இவை கண்ட எழுச்சியின் அடிப்பகுதிக்கும் நடுக்கடல் முகடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளன.[1][2][3]
கீழ்ப் புவியோடு உருகி மேல் தள்ளப்பட்டு நடுக் கடல் முகட்டுப் பகுதியில் கடல் மட்டத்துக்கு வந்து புதிய கடல் புறவோட்டை உருவாக்குகின்றன. இப் புதிய கடல் புறவோடு பெரும்பாலும் எரிமலைப் பாறைகளாக இருப்பதுடன் கரடுமுரடான நிலவமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இக் கரடுமுரடான தன்மையின் அளவு நடுக் கடல் முகடுகள் பரவும் வீதத்தில் தங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடும் இப் பரவல் வீதங்கள் கூடிய வேகம், நடுத்தர வேகம், குறைவான வேகம் என மூன்றாகப் பகுக்கப்படுகின்றன. கூடிய வேகம் என்பது ஆண்டுக்கு 100 மில்லிமீட்டரிலும் அதிகமானது, நடுத்தரம் ~ 60 மிமி / ஆண்டும், குறைந்த வேகம் ஆண்டுக்கு 20 மில்லிமீட்டரிலும் குறைவானதும் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith et al. Gooday, ப. 5
- ↑ Csirke 1997, ப. 4.
- ↑ Britannica