உள்ளடக்கத்துக்குச் செல்

த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர்
நடிப்பு
கலையகம்கலர் போர்ஸ்
விநியோகம்Lionsgate பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 11, 2013 (2013-11-11)(ஐக்கிய இராச்சியம்)
நவம்பர் 22, 2013 (அமெரிக்கா)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130–140 மில்லியன்
மொத்த வருவாய்$864.6 மில்லியன்

தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர் (ஆங்கில மொழி: The Hunger Games: Catching Fire) இது 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் சாகச திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்க, ஜெனிபர் லாரன்ஸ், ஜோஷ் ஹட்சர்சன், லியம் ஹெம்ச்வோர்த், பிலிப் சீமோர் ஹாப்மன், ஸ்டான்லி துச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதை சுருக்கம்

[தொகு]

திர்கால உலகம் எப்படி மாறும் என யோசித்ததன் விளைவே இப்படத்தின் கதை. அதாவது வடஅமெரிக்கா ஒரு காலகட்டத்தில் உள்நாட்டுக்கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அப்படி பிரியும்போது பிறக்கும் ‘பனெம்’ என்ற நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ‘டிஸ்ட்ரிக்ட் 1’ முதல் ‘டிஸ்ட்ரிக்ட் 12’ வரை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளிலிருந்தும் தலா 2 பேரை (ஒரு ஆண், ஒரு பெண்) தேர்வு செய்து, அந்த 24 பேரையும் ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டு விடுவார்கள். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடுத்தவரை கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்படி விளையாடப்படும் இந்த ஆபத்தான விளையாட்டை ‘தி ஹங்கர் கேம்ஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை ஒரு ரியாலிட்டி ஷோ போல பெரும் பணத்தை முதலீடு செய்து, அதை ‘லைவ்’வாக ஒளிபரப்பவும் செய்வார்கள். தவிர, போட்டியாளர்களைத் தயார்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், சண்டையின்போது அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், முதலுதவிகள் என அனைத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்கள்.

இந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடக்கிறது. அப்படி 74ம் ஆண்டு நடைபெறும் ஹங்கர் கேம்ஸில் பங்குகொண்டு கட்னிஸ் எவர்டீனும் ஜெனிபர் லாரன்ஸ், பீட்டா பெல்லர்க்கும் ஜோஷ் ஹட்சர்சன் ஜெயிப்பதோடு நிறைவடையும் முதல் பாகமான ‘தி ஹங்கர் கேம்ஸ்’ திரைப்படம்.

இந்த இரண்டாம் பாகத்தில், வருடா வருடம் மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்படும் இந்த விளையாட்டிற்கு எதிராக சில புரட்சிகள் வெடிக்கின்றன. இருந்தாலும் நிலைமையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அப்பகுதியின் தலைவர் ‘ஸ்நோ’ அந்த இக்கட்டான சூழலிலும் 75வது ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘தி குவார்ட்டர் க்யூல்’ எனும் நிகழ்வும் அதே ஆண்டு வருகிறது.

74ம் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்று பீட்டா பெல்லர்க்கும் ஜோஷ் ஹட்சர்சன் நாயகி கட்னிஸ் எவர்டீனும் மீண்டும் 75ஆம் ஆண்டு போட்டியிலும் கலந்து கொள்வதே ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’. இரண்டு நாயகர்களின் காதலில் குழம்பித் தவிக்கும் நாயகி கட்னிஸ் யாருடன் சேர்கிறார்..? இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர்கள்

[தொகு]

இயக்குனர்

[தொகு]

இந்த அதிரடி ஆக்ஷன் கதையில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் லாரன்ஸ்.

பாக்ஸ் ஆபீஸ்

[தொகு]

முதல் மூன்றே தினங்களில் 155 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ரூபாயில் ஏறக்குறைய 900 கோடிகள்.

தமிழில்

[தொகு]

இந்த திரைப்படம் தமிழ்மொழியில் தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]