உள்ளடக்கத்துக்குச் செல்

அடால்ஃப் வின்டாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடால்ஃப் ஒட்டோ ரீன்ஹோல்ட் வின்டாஸ்

பிறப்பு 25 டிசம்பர் 1876
பெர்லின், ஜெர்மன் பேரரசு
இறப்பு9 ஜூன்  1959(1959-06-09) (82 வயது)
ஜாேட்டின்ஜென், மேற்கு ஜெர்மனி
தேசியம் ஜெர்மனி
துறைகரிம வேதியியல்
உயிர்வேதியியல்
முக்கிய மாணவர்அடால்ஃப் பியுட்டினன்ட் எட்ஹாட் ஃபென்காேல்ஸ்
பரிசுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1928)
ஜாேட்டின்ஜென்னில் உள்ள அடால்ஃப் வின்டாஸ் - ன் கல்லைற

அடால்ஃப் ஒட்டோ ரீயினோல்டு வின்டாசு (Adolf Otto Reinhold Windaus)(25 டிசம்பர் 1876-9 ஜூன் 1959) என்பவர்  ஒரு ஜெர்மன் வேதியியல் வல்லுநர் ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டில் செய்த கொழுப்பு மற்றும் வைட்டமின்களின் தாெடர்புக்கான ஆராய்ச்சிக்காக வேதியியலில் நோபல் பரிசு  பெற்றார்.   அவர் அடால்ஃப் பியுட்டினன்ட் எனபவாின்  முனைவர் ஆலோசகராக இருந்தார். அவரும்  1939 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

அடால்ஃப் வின்டாஸ் பெர்லினில் பிறந்தார். எமில் பிஷர் என்பவரது உரைகளின் மூலம் வேதியியல் மீதான அவரது ஆர்வம்   எழுப்பப்பட்டது.   அவர் மருத்துவம் மற்றும் வேதியியலை முதலில் பெர்லினிலும்  பின்னர் ஃப்ரீபர்க்கிலும் படித்தார்.    இவர் 1900 ன் தொடக்கத்தில் ஃப்ரீபர்க்கில் பல்கலைக்கழகத்தில் கொழுப்பு மற்றும் மற்ற ஸ்டெரால்கள் படிப்பிற்காக பிஎச்டி பட்டம் பெற்றார்.  1913 இல் இவர் இன்ஸ்பிரக்கில் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரானார்.  பின்னர் 1915 ஆம் ஆண்டு கோட்டிங்கென் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவரது ஓய்வு வரை  அதாவது 1944 வரை தங்கியிருந்தார்

அவர் காெலஸ்ட்ரால் பல்வேறு படிநிலைகளில் வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால் )யாக மாறுவதை கண்டறிவதில் ஈடுபட்டிருந்தார்.     தன்னுைடய காப்புாிமைகளை  மெர்க் மற்றும் பேயர் ஆகியாேருக்கு வழங்கினார். பற்றும் அவர்கள்  விஜன்டால் எனப்படும் மருத்துவத்தை 1927-ல் காெண்டுவந்தனர்.[1]

வைட்டமின் D3
7-Dehydrocholesterol

மேற்கோள்கள்

[தொகு]
  1. Haas, Jochen (2007). "[Vigantol--Adolf Windaus and the history of vitamin D]". Wurzbg Medizinhist Mitt 26: 144–81. பப்மெட்:18354894. 

வெளி இணைப்புகள்

[தொகு]