இரகத் நுசரத் பதே அலி கான்
உஸ்தாத் இரகத் நுசரத் பதே அலி கான் | |
---|---|
2014 இல் இரகத் நுசரத் பதே அலி கான் | |
தாய்மொழியில் பெயர் | راحت فتح علی خان |
பிறப்பு | இரகத் நுசரத் பதே அலி கான் 9 திசம்பர் 1974[1][2] பைசலாபாத், பஞ்சாப், பாக்கித்தான் |
தேசியம் | பாகிஸ்தானியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை[2] |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1997–present[2] |
இணைந்த செயற்பாடுகள் |
|
இரகத் பதே அலி கான் ( Rahat Fateh Ali Khan; பிறப்பு 9 டிசம்பர் 1974)[1] ஓர் பாக்கித்தான் பாடகராவார். கவ்வாலி, பக்தி இசையின் ஒரு வடிவமான சூபி போன்றவற்றை முதன்மையாக பாடினார். பாக்கித்தானில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் இவரும் ஒருவர்.[3] கவ்வாலி மட்டுமின்றி, கசல்கள் மற்றும் பிற மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். பாகிஸ்தான், இந்தியா மற்றும் உலகெங்கிலும் பயணம் செய்து இவர் பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.[4]. இவர் நுசுரத் பதே அலி கானின் மருமகனும், பரூக் பதே அலி கானின் மகனும் மற்றும் கவ்வாலி பாடகர் பதே அலி கானின் பேரனும் ஆவார். கவ்வாலி தவிர, கஜல் மற்றும் இதர ஒளி இசையையும் இவர் நிகழ்த்துகிறார். இவர் ஹிந்தி சினிமா மற்றும் பாக்கித்தான் திரையுலகில் பின்னணி பாடகராகவும் பிரபலமாக இருந்தார்.[5]
ஆரம்ப கால வாழ்க்கை
இரகத் பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள பைசலாபாத்தில் பாரம்பரிய பாடகர்களைக் கொண்ட பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.[6] பதே அலி கானின் பேரனும், புகழ்பெற்ற கவ்வாலி பாடகர் நுஸ்ரத் பதே அலி கானின் மருமகனும், பரூக் பதே அலி கானின் மகனும் ஆவார்.[7]
இவர் சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆஅர்வத்தைக் காட்டினார். மேலும் மூன்று வயதிலேயே தனது மாமா மற்றும் தந்தையுடன் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். ஏழு வயதிலிருந்தே, தனது மாமா நுஸ்ரத் ஃபதே அலி கானிடம் கவ்வாலி பாடுவதில் பயிற்சி பெற்றார்.[8][9]
தொழில்
தனது ஒன்பது வயதில், தனது தாத்தாவின் நினைவு நாளில், முதல் முறையாக நிகழ்ச்சி நடத்தினார். பதினைந்து வயதிலிருந்தே, இவர் நுசுரத் பதே அலி கானின் நன்கு அறியப்பட்ட கவ்வாலி குழுவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். 1985 இல் தனது மாமாவுடன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தார். 'கவ்வாலி குழு'வில் தனது பங்கை நிறைவேற்றுவதோடு, வெவ்வேறு கச்சேரிகளில் தனிப்பாடல்களையும் இவர் நிகழ்த்தினார்.
இவர் பாப் (2003) திரைப்படத்தில் இடம் பெற்ற "மன் கி லகன்" பாடல் மூலம் பாலிவுட்டில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
ஏப்ரல் 2012 இல், இரகத் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். வெம்ப்லி அரங்கிலும் மான்செஸ்டர் அரங்கிலும் நிகழ்ச்சிகளை நடத்தினார். 20,000 பேருக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.[10][11]
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
சோனு நிகாமுடன் சோட்டே உஸ்தாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இவர் நடுவராக இருந்தார். 2008 இல் என்டிடிவி இமேஜினில் திரையிடப்பட்ட ஜூனூன் என்ற பாடல் தொடர்பான நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் இருந்தார்.[12][13]
2014 அமைதிக்கான நோபல் பரிசு விழாவில் நிகழ்ச்சி நிகழ்த்த அழைக்கப்பட்ட முதல் பாக்கித்தானிய கலைஞர் இவர்.[14] அதில் இவர் நுசுரத் பதே அலி கானின் கவ்வாலி பாடலான "தும்ஹே தில்லாகி" , "மஸ்த் கலந்தர்" ,"ஆவோ பர்ஹாவோ" போன்ற பாடல்களைப் பாடினார்.[15][16]
சர்ச்சை
2018 ஆம் ஆண்டில், நுசரத் பதே அலி கானின் மகள், தனது தந்தையின் பாடல்களைப் பாடும் பாடகர்களின் பதிப்புரிமை மீறலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புவதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த இரகத், தான் நுசரத்தின் தத்தெடுக்கப்பட்ட வாரிசு என்றும், அவரது பாடல்களைப் பாட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் கூறினார்.[17]
ஜனவரி 2019 இல், கான் வெளிநாட்டு நாணயத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்திய அரசின் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.[18]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 Rahat Fateh Ali Khan. #CokeStudio7. Retrieved 20 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 Muzaffar, Erum Noor. "'I am all in favour of education for women' –– Ustad Rahat Fateh Ali Khan". www.thenews.com.pk. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021.
- ↑ "You can't listen to them if you can't afford them…". The Express Tribune. 14 July 2017. https://tribune.com.pk/story/1457866/cant-listen-cant-afford/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05.
- ↑ Pallavi Jassi (20 April 2008). "Sufi sublime". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 3 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121003153121/http://www.expressindia.com/latest-news/Sufi-sublime/299186/.
- ↑ Asghar, Toheed. Interview with Yousuf Toheed Asghar. Hereditary lineage of Chak 248, BIsmillahpur, Faisalabad, Pakistan. 17 January 2023.
- ↑ "Prince of Qawwalis". Archived from the original on 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021.
- ↑ al., Sarina Singh ... et (2008). Pakistan & the Karakoram Highway (7th ed.). Footscray, Vic.: Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741045420.
- ↑ M. Sheikh, A. Sheikh (2012). Who's Who: Music in Pakistan. Xlibris Corporation, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781469191591.
- ↑ "Rahat Fateh Ali Khan smashes BO sales at Wembly Stadium". Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 3 August 2012.
- ↑ "Rahat Fateh Ali Khan". cokestudio.com.pk. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
- ↑ "Annu Kapoor host Junoon Kuchh Kar Dikhaane Ka". 2 May 2008. Archived from the original on 12 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 February 2011.
- ↑ "Ustaad Fateh Ali Khan to perform at the IIFA Magic of the Movies & Technical Awards". IIFA. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
- ↑ "Rahat Fateh Ali Khan to perform at Nobel Peace Prize Award ceremony". Pakistan Today. 22 November 2014. http://www.pakistantoday.com.pk/2014/11/22/entertainment/rahat-fateh-ali-khan-to-perform-at-nobel-peace-prize-award-ceremony/.
- ↑ "Rahat to sing 'Aao Parhao' anthem at Nobel Peace Prize Concert". தி எக்சுபிரசு திரிப்யூன். 7 December 2014. http://tribune.com.pk/story/803218/rahat-to-sing-aao-parhao-anthem-at-nobel-peace-prize-concert/.
- ↑ "USTAD RAHAT FATEH ALI KHAN – 2014 Nobel Peace Prize Concert Artist". Nobel Peace Prize Concert. Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
- ↑ "Rahat Fateh Ali Khan: Don't need permission to sing Nusrat Fateh Ali Khan's Qawwalis". The Indian Express (in Indian English). 4 June 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "Pakistani Singer Rahat Fateh Ali Khan Accused of Smuggling Foreign Currency, ED Issues Notice". News18. 30 January 2019. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.