பெரிய ஆட்ரான் மோதுவி
பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC) எனப்படுவது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைகூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் இயற்பியல் கருவி ஆகும். அதிகளவு ஆற்றலைக் கொண்ட புரோத்தன்களை எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி (particle accelerator) ஆகும்[1].
இத்திட்டத்தை உலகின் 85 நாடுகளின் 8,000 இயற்பியலாளர்களும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும் இணைந்து பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 300 அடி ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீ நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர்.
இந்தக் கருவியைக் கொண்டு புரோத்தன்களை 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டில் மோதவிட்டால், சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும். இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். இதுவரை புலப்படாமல், அகப்படாமல் ஆனால் இருப்பதாக நம்பப்படும் ஹிக்ஸ் போசான் (Higgs Boson) போன்ற துகள்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம் என்று துகள் இயற்பியலார்கள் அனுமானிக்கிறார்கள். இதைக் கண்டுகொண்டால், தரப்படுத்தப்பட்ட மாதிரி (Standard Model) என்று இப்பொழுதுள்ள அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் புரியலாம். அத்துடன் அடிப்படைத் துகள்கள் எவ்வாறு திணிவு போன்ற இயல்புகளை எவ்வாறு பெற்றன என அறியலாம் என நம்பப்படுகிறது.
இக்கருவி முதன் முதலாக 2008, செப்டம்பர் 10 இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 அக்டோபர் 21 இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில், பகுதி 3-4 ல் இரு மீப்பெரு காந்தங்களுக்கு இடையில் மின் சுற்று பழுதினால் பெருமளவில் நீர்ம ஹீலியம் கசிந்து விட்டது. அதனால் "மோதுவிக்கு" இரண்டு மாதம் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த ஆட்ரான் மோதுவி மறுபடியும் 2009 ஏப்ரல் இயங்கத் துவங்கும் என்று இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் இயக்கம்
செப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில் 7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு புரோட்டான் கற்றைகள் மோதுவிக்கப்பட்டன. தொடர்ந்து 18 முதல் 24 மாதங்களுக்கு இயக்கத்தில் இருக்கப்போகும் பெரிய ஆட்ரான் மோதுவியில், அண்டத்தின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; புதிய இயற்பியலைத் துவக்கவல்ல இவ்வாய்வில் கலந்து கொண்டிருக்கும் 50 இந்திய இயற்பியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. [2]
மேற்கோள்கள்
- ↑ The God Particle
- ↑ Great day for science [1]
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
- ஒரு துகளை தேடி
வெளி இணைப்புகள்
- உலகில் பிரமாண்ட அளவிலும் செலவிலும் நடைபெறும் ஆய்வு.
- Energising the quest for 'big theory'
- symmetry magazine LHC special issue August 2006, special issue December 2007
- LHC UK webpage
- US LHC webpage
- லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் ராப்
- அண்டத்தின் துவக்கம் (LHC)
- கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்
- பூமியின் ஆழத்தில் அணு சோதனை-உயிரினம் தோன்றுவதை கண்டுபிடிக்க முயற்சி
- பூமிக்கு அடியில் செயற்கை பிரளயம்,அணுவை வெடித்து பயங்கர சோதனை
- பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை: உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள்