உள்ளடக்கத்துக்குச் செல்

களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:28, 17 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:1997 நிகழ்வுகள்; added Category:1997 இல் இலங்கை using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் டிசம்பர் 12, 1997, இலங்கையில் களுத்துறை நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றன[1]. மூன்று இலங்கைத் தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை[2].

இப்படுகொலைகள் இடம்பெற்ற வேளை இச்சிறைச்சாலையில் மொத்தம் 137 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் டிசம்பர் 12 ம் தேதி பிப 1:00 மணிக்கு வார்ட் D ற்கு முன்பாக சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களே வார்ட் D ஐத் திறந்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் முன்னாலேயே தமிழர்கள் மூவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் எனவும் தப்பியவர்களின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.[3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]