உள்ளடக்கத்துக்குச் செல்

மேஜர் சைத்தான் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:23, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மேஜர்

சைத்தான் சிங்

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் மேஜர் சைத்தான் சிங்கின் மார்பளவுச் சிற்பம்
பட்டப்பெயர்(கள்)Shaiti
பிறப்பு(1924-12-01)1 திசம்பர் 1924
ஜோத்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 நவம்பர் 1962(1962-11-18) (அகவை 37)
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய இராணுவம்
சேவைக்காலம்1949–1962
தரம் மேஜர்
தொடரிலக்கம்IC-6400[1]
படைப்பிரிவு13 குமாவுன் ரெஜிமெண்ட்
போர்கள்/யுத்தங்கள்நாகாலாந்து சண்டை
1961 கோவா முற்றுகை
இந்திய சீனப் போர்
  • ரெசாங் லா கணவாய் சண்டை
விருதுகள் பரம் வீர் சக்கரம்
துணை(கள்)சகுன் கன்வர்[2]

மேஜர் சைத்தான் சிங் ( Major Shaitan Singh Bhati), PVC (1 டிசம்பர் 1924 – 18 நவம்பர் 1962) இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருதைப் பெற்ற இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஜோத்பூர் இராச்சியப் படையில் இராணுவ அதிகாரியாக சேர்ந்தார். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, இவர் குமாவுன் ரெஜிமெண்டில் படை அதிகாரியாக சேர்ந்தார். இவர் நாகா இனக் குழு சண்டை நிறுத்தப் போர் மற்றும் 1961 கோவா முற்றுகையில் கலந்து கொண்டவர்.

1962 இந்திய சீனப் போரின் போது கிழக்கு லடாக்கில் ரெசாங் லா கணவாயை காக்கும் படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தார். 18 நவம்பர் 1962 அன்று, சீனாவின் பெரும் படைகளை எதிர்த்துப் போராட தனது வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டே போராடினார். உடல் முழுவதும் குண்டுக் காயங்களுடன் சைதான் சிங் வீர மரணமடைந்தார். இவரது மறைவிற்குப் பின் இந்தியக் குடியரசுத் தலைவர் 18 நவம்பர் 1962 அன்று இவரது சேவையைப் பாராட்டி பரம் வீர் சக்கரம் விருது வழங்கினார்.[3][4]

பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Chakravorty 1995, ப. 73.
  2. "Major Shaitan Singh's widow dies". Business Standard. Press Trust of India. 18 April 2015. http://www.business-standard.com/article/pti-stories/major-shaitan-singh-s-widow-dies-115041800816_1.html. பார்த்த நாள்: 4 December 2017. 
  3. Major Shaitan Singh PVC
  4. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]