உள்ளடக்கத்துக்குச் செல்

மலம்புழா அணை

ஆள்கூறுகள்: 10°49′49.8″N 76°41′1.5″E / 10.830500°N 76.683750°E / 10.830500; 76.683750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:47, 25 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கேரள அணைகள்; added Category:பாலக்காடு மாவட்டத்திலுள்ள அணைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மலம்புழா அணை
மலம்புழா அணையும் நீர்தேக்கமும்
அதிகாரபூர்வ பெயர்Malampuzha Dam
அமைவிடம்பாலக்காடு மாவட்டம், கேரளம்
கட்டத் தொடங்கியதுமார்ச் 1949
திறந்தது9 அக்டோபர் 1955
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமலம்புழா ஆறு
உயரம்115.06 m
நீளம்2,069 m
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மலம்புழா நீர்தேக்கம்
மொத்தம் கொள் அளவு226 million cubic metres[1]
நீர்ப்பிடிப்பு பகுதி147.63 sq. km.

மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும். இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. 1849 மீ. நீளம் கொண்ட கட்டப்பட்ட அணைப்பகுதியும் 220 மீ. நீள மண்ணாலான கரைப்பகுதியும் கொண்டது.[2] கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது இரு கால்வாய்கள் அமைப்பையும் 42,090 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.[3]

1949ஆம் ஆண்டுத் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1955ஆம் ஆண்டில் முடிவடைந்தன. இதன் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பு 145 சதுரக் கிலோமீட்டர்களாகும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8000 சதுர மீட்டர்களாகும். கால்வாய்கள் மூலம் வேளாண்மை ஆயக்கட்டுகள் பயன்பெறுகின்றன. நீர்த்தேக்கத்திலிருந்து பாலக்காடு நகருக்கான குடிநீர் வழங்கப்படுகிறது. மலம்புழா அணை சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்த அணை 28.5 ஏக்கர் பரப்பளவில் மலம்புழாத் தோட்டம் என்னும் கண்கவர் தோட்டத்தையும், இழுவை வண்டியையும் (Ropeway), குழந்தைகள் பூங்காவையும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் பல பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டியும் (Aquarium), பாம்புப் பூங்காவையும் கொண்டுள்ளது. இங்கு மலைப்பாம்பு , நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்படப் பலவகைப் பாம்புகள் உள்ளன.மேலும் ஜப்பானீஸ் பூங்கா, பாறைப் பூங்காவையும் (Rock Garden) அருகில் கொண்டுள்ளது.[3]

போக்குவரத்து

[தொகு]

மலம்புழா அணைக்கு போக்குவரத்தானது பெரும்பாலும் பாலக்காடு மாநகரை இணைக்கிறது. பாலக்காடு நகரில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் மலம்புழா அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள அரசுப் போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பிலும் தனியார் பேருந்துகளும் செல்கின்றன. மேலும் மூன்று சக்கர ஆட்டோக்களும் செல்கின்றன. பாலக்காடு நகராட்சியில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலா பேருந்துகளும் செல்கின்றன. இந்த அணைக்கு பெரும்பாலும் கோயம்புத்தூர் , திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் கேரள மாநில மக்களும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அணையின் சுற்றுப்புற பகுதியில் மலையாள மொழிக்கு நிகராக தமிழர்கள் புரிந்து கொள்ள உதவியாக தமிழ் மொழி வழிகாட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Malampuzha Dam, Brief about project". India-WRIS, National Remote Sensing Centre.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Malampuzha dam to celebrate Golden Jubilee". The Hindu. 2005. Archived from the original on 2009-11-07. பார்க்கப்பட்ட நாள் 2008-02-05.
  3. 3.0 3.1 "Reservoir and irrigation - Malampuzha Dam". www.malampuzha.com. Archived from the original on 2008-02-13. பார்க்கப்பட்ட நாள் 2008-02-05.

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்புழா_அணை&oldid=3781225" இலிருந்து மீள்விக்கப்பட்டது