திசம்பர் 3
Appearance
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 3 (December 3) கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.[1][2]
- 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.[1]
- 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
- 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.
- 1818 – இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.
- 1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
- 1903– சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.[1]
- 1904 – வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1910 – நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.
- 1919 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.
- 1927 – முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.
- 1944 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
- 1959 – சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
- 1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
- 1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- 1978 – வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
- 1979 – அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.
- 1984 – போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
- 1989 – பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
- 1992 – 80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.
- 1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
- 1994 – பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.
- 1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.
- 1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.
- 2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
- 2009 – சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
- 2012 – பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
பிறப்புகள்
[தொகு]- 1753 – சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர், நெசவுத் துறையின் முன்னோடி (இ. 1827)
- 1795 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1879)
- 1833 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர் (இ. 1915)
- 1857 – ஜோசப் கொன்ராட், போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (இ. 1924)
- 1884 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
- 1886 – மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (இ. 1978)
- 1889 – குதிராம் போஸ், வங்காளப் புரட்சியாளர் (இ. 1908)
- 1900 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமன் வேதியியலாளர் (இ. 1967)
- 1909 – கே. ராஜலிங்கம், இலங்கையின் மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத்தலைவர் (இ. 1963)
- 1925 – கிம் டாய் ஜுங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர் (இ. 2009)
- 1931 – விஜய்குமார் மல்கோத்திரா, இந்திய அரசியல்வாதி
- 1933 – பால் சோசப் கிரட்சன், டச்சு வேதியலாளர்
- 1935 – நெல்லை ஆ. கணபதி, தமிழக சிறுவர் புதின எழுத்தாளர்
- 1948 – புதுவை இரத்தினதுரை, ஈழத்துக் கவிஞர்
- 1960 – ஜூலியானா மூரே, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
இறப்புகள்
[தொகு]- 1154 – நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (பி. 1073)
- 1552 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் , புனிதர் (பி. 1506)
- 1882 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1803)
- 1894 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர் (பி. 1850)
- 1969 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்கறிஞர் (பி. 1888)
- 1979 – தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (பி. 1905)
- 1998 – முடியரசன், தமிழகக் கவிஞர் (பி. 1920)
- 2000 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (பி. 1917)
- 2010 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (பி. 1922)
- 2011 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1923)
சிறப்பு நாள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.