கே. ஆர். சேதுராமன்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கே. ஆர். சேதுராமன் சௌராட்டிர சமூகத்தில், மருத்துவர். (குட்டின்). கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதிகளுக்கு 1939ல் மதுரையில் பிறந்தார்.
கல்வி
நூற்றாண்டு விழா கொண்டாடிய மதுரை சௌராட்டிர உயர்நிலைப் பள்ளியில் 1956ல் பள்ளி இறுதி படிப்பு முடித்தவர். தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கும் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் கல்வியை 1960ல் முடித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., முதுகலை பட்டம் பெற்று, சென்னைப் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றார்.
பணி புரிந்த இடங்கள்
- சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், மதுரை,
- செயின்ட் ஜான் கல்லூரி நூலகம், பாளையங் கோட்டை
- சௌராட்டிர கல்லூரியில் நிறுவன நூலகர்,மதுரை
- சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், கோவை
- கோவை பாரதியார் பல்கலைக் கழக நூலகம், 1999 முடிய.
இவரைப் பற்றிய பிற செய்திகள் :- மாணவப் பருவத்தில் இருந்தே எழுத்தாளாராக விளங்கினார். கட்டுரைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். பல்துறை, பல்சுவை கட்டுரைகள் படைத்துள்ளார். ஆனந்தவிகடன், தினமணி கதிர், தினமணி சுடர், மஞ்சரி, சௌராட்டிர மணி, ஜீனியர் விகடன், முத்தாராம் முதலிய வார இதழ்களிலும், ஜகத்குரு, சௌராட்டிர ஜோதி, சௌராட்டிர நேசன், சௌராட்டிர டைம், சிங்கதி, பாசாபிமானி முதலிய சௌராட்டிர மாத இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு இலக்கியவாதி, சிறந்த பேச்சாளார், கவிஞர், தகவல் எழுத்தாளார். கலை இலக்கிய விமர்சகர். இவர் படைத்த நூல்கள் :- 1 இவருடைய தனிப்பெரும் படைப்பான, ’சேதுராமன் மும்மொழி சௌராட்டிர அகராதி’. செம்மொழி தமிழ், நன்மொழி சௌராட்டிரம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி அகராதி நூல், ஒப்பு நோக்கும் மொழி ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு தங்கச் சுரங்கம். 2 சௌராட்டிர மொழி இலக்கியம், பண்பாடு, வரலாறு,அரசியல் ஆகியவைகளைப் பற்றி இவருடைய ‘தமிழ்நாட்டில் சௌராட்டிரர்: முழு வரலாறு’ நூல் அதிகமான விவரங்களைத் தருகிறது. சௌராட்டிரர்களின் மொழி, பண்பாடு, நாகரீகம் குறித்து அறிஞர்களும், ஆய்வளர்களும் இவருடைய ஆலோசனைகளை நாடுகின்றனர். 3 இவரது முதல் நூலான ஸ்ரீதியாகராச வேங்கடரமண சரித்திரம், (1965), இவரை இசையுலகில் பிரபலப்படுத்தியது. வாலாசப்பேட்டை வேங்கடரமண பாகவதர்குறித்து முதன் முதலில் கூடுதலான விவரங்களைத் தரும் நூலாக இன்றும் விளங்குகிறது. 4 சௌராட்டிரர்களின் ’கோத்திரக் குடும்பப்பெயர் அகராதி’ நூல். 5 ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் என்ற சரித்திர நூலை வெளியிட்டுள்ளார்.5 ‘வராக விடுதலை’ என்ற இவரது சிறுகதை ’தலித்’ உணர்வு கொண்டுள்ளதாகப் பாராட்டப்படுகிறது.
பொதுப்பணி :- பல பொது, இலக்கிய, சமூகச் சங்கங்களில் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளில் சமூக நலனுக்காகச் பொதுப்பணி செய்துள்ளார். இவருடைய பணிகளைப் பாராட்டிப் பொது மக்கள் எழு கௌரவப் பட்டங்கள் வழங்கியுள்ளனர். அவைகள் விபரம், ’சௌராட்டிர சேவா மாருதி’, சித்தசேவா இரத்தினம், நூல் ஆய்வுக் கோமான், சமூக சேவா சிரோன்மனி, சமூக சேவா இரத்தினா, சௌராட்டிர ஸ்ரீ, வித்வ ஸ்ரீ. பல நூலகளுக்கு முகவுரை, சிறப்புரை எழுதியுள்ளார். மேலும் நடுவண் அரசு 2007ல் இவரது எழுத்துப்பணிக்காக ‘சாகித்திய அகாதமி’ விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
இயக்கம் :- ஹோமியோபதி மருத்துவ முறை பிரசார இயக்கத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இவர் பதிவு பெற்ற ஹோமியோபதி பரம்பரை மருத்துவர். இந்திய நூலக இயக்கத் தந்தையின் நினைவாக முனைவர். எஸ்.ஆர். அரங்கநாதன் மையத்தை சென்னையில் நிறுவியுள்ளார். நூலக இயக்கத்திற்காக தீவிரமாக பாடுபட்டவர். நூலகர் சங்கங்களில் பல பொறுப்புகள் வகித்தவர். அண்மையில் இவர் தொடங்கி வைத்த ’நூல் கொடை இயக்கம்’ (Books Donation Movement) மிகப் பிரபலமாகியுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம், பிரமுகர்களுக்கு மாலை மரியாதையுடன் ஒரு நூலையும் வழங்கி கெளரவிக்க வேண்டும், கோவில்களில் எடைக்கு எடை துலாபாரமாக நூலகள் வழங்கவேண்டும், பிறந்த நாள், திருமணநாள், மூதாதையர் நினைவு நாள் முதலிய நாட்களில் புத்தக தானம் செய்ய வேண்டும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
உசாத்துணை
- சௌராட்டிரர்: முழு வரலாறு, 2008, மூன்றாம் பதிப்பு, ஆசிரியர், கே. ஆர். சேதுராமன்