வெனிசுவேலா
Bolivarian Republic of Venezuela வெனிசுவேலா República Bolivariana de Venezuela | |
---|---|
குறிக்கோள்: Dios y Federacion கடவுளும் கூட்டாட்சியும் | |
நாட்டுப்பண்: Gloria al Bravo Pueblo வீரமுள்ள மக்களுக்கு புகழ் | |
தலைநகரம் | கராகஸ் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
மக்கள் | வெனிசுவேலர் |
அரசாங்கம் | சனாதிபதிக் குடியரசு |
• சனாதிபதி | நிக்கோலசு மதுரோ |
• | ஜோர்ஜே ரொட்ரிகெஸ் |
விடுதலை | |
• ஸ்பெயினிடம் இருந்து | ஜூலை 5, 1811 |
• கிரான் கொலம்பியாவிடம் இருந்து | ஜனவரி 13, 1830 |
• அங்கீகாரம் | மார்ச் 30, 1845 |
பரப்பு | |
• மொத்தம் | 916,445 km2 (353,841 sq mi) (33வது) |
• நீர் (%) | 0.32 |
மக்கள் தொகை | |
• பெப்ரவரி 2008 மதிப்பிடு | 28,199,822 (40வது) |
• 2001 கணக்கெடுப்பு | 23,054,210 |
• அடர்த்தி | 30.2/km2 (78.2/sq mi) (173வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $335 பில்லியன் (30வது) |
• தலைவிகிதம் | $12,800 (63வது) |
ஜினி (2000) | 44.1 மத்திமம் |
மமேசு (2007) | ▲ 0.792 Error: Invalid HDI value · 74வது |
நாணயம் | வெலெசுவேலாவின் பொலிவார் (VEF) |
நேர வலயம் | UTC-4:30 |
அழைப்புக்குறி | 58 |
இணையக் குறி | .ve |
வெனிசுவேலா (Venezuela, எசுப்பானியம்: beneˈswela), தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள நாடாகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" (Bolivarian Republic of Venezuela) என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார்.
புவியியல் [தொகு]
வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்த பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும்.
பைக்கோ பொலிவார் , 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயர்ந்த புள்ளி, இந்த பகுதியில் அமைந்துள்ளது