உள்ளடக்கத்துக்குச் செல்

லிங்குவா லிப்ரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sriveenkat (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Sriveenkat (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 19: வரிசை 19:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:மீடியாவிக்கி இணையங்கள்]]
[[பகுப்பு:மொழியியல்]]

14:21, 30 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

லிங்குவா லிப்ரே
(Lingua Libre)
Overview of the website's homepage in December 2020
வலைத்தள வகைமொழிசார் ஒலிப்பதிவு கருவி,
இணைய மொழியியல்சார் ஊடகத் தொகுப்பு
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழியாமை
உரிமையாளர்பிரான்சிய விக்கிமீடியா
உருவாக்கியவர்பிரான்சிய விக்கிமீடியா, விக்கிமீடிய சமூகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்பதிவு செய்து பதிவேற்ற தேவைப்படும் மற்றபடி தேவையில்லை
உள்ளடக்க உரிமம்Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0)
வெளியீடுஆகத்து 2016; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2016-08)
தற்போதைய நிலைActive
உரலிlingualibre.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

லிங்குவா லிப்ரே என்பது பிரான்சிய விக்கிமீடியாவின் இணைய கூட்டுத் திட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட சொற்களை ஒலிப்பதிவுச் செய்ய உதவும் கருவியாகும். இது கட்டற்ற உரிமத்தில் கூட்டுழைப்பு, பன்மொழியாமை, ஒலிக்கட்புலத் தரவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது விரைவாக ஒலிப்பை பதிவு செய்ய உதவுகிறது, இது பயனர்களை நூற்றுக்கணக்கிலான கோப்புகளை பதிவேற்ற அனுமதிக்கிறது. இதில் பங்களிப்பாளர்கள் 250 மேற்பட்ட மொழிகளில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கியுள்ளனர்.

விளக்கம்

லிங்குவா லிப்ரே எந்த ஒரு மொழியின் சொற்கள், சொற்றொடர்களையும் பதிவு செய்யும். பேசப்படும் மொழியாக இருந்தால் ஒலிபதிவாகவும், சைகை மொழியாக இருந்தால் நிகழ்படமாக பதிவு செய்து உதவுகிறது.

2017 இல் அடிகாமெக்வ் மொழியைப் பேசுபவருடன் ஒரு ஒலிப்பதிவு அமர்வு.மொன்றியல், கனடா

பதிவாளருக்கு ஒரு சொற்கள் பட்டியல் வழங்கப்படுகின்றன, சுயமாகவோ, விக்கிமீடியப் பகுப்புகளைக் கொண்டோ சொற்பட்டியலை உருவாக்கலாம். பதிவாளர் வெறுமனே திரையில் காட்டப்படும் சொல்லைப் படித்து, ஒரு நொடி அமைதி காக்கும் போது அதை கண்டறிந்து மென்பொருள் சொற்பட்டியில் உள்ள அடுத்த சொல்லிற்கு செல்லும். [1] இந்த முறைமை, திறந்த மூல மென்பொருளான ச்டூகா (Shtooka) இலிருந்து கொண்டுவரப்பட்டது. இதனின் உருவாக்குநர் நிக்கோலசு வியோனியால் ஒரு மணி நேரத்திற்கு பல நூற்றுக்கணக்கான சொற்களைப் பதிவுசெய்வது சாத்தியமாகியது. பதிவுகள் வலை நுகர்வியிலிருந்து விக்கிமீடியப் பொதுவகத்துக்கு தானாகவே பதிவேற்றப்படும்.

2021 வசந்த காலத்தில், இசுதிராசுபூர்க்க்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லிங்குவா லிப்ரே முடக்கநிலையில் இருந்தது, ஆனால் பதிவுகள் எதுவும் இழக்கப்படவில்லை. [2]

பதிவுகளின் பயன்பாடு

பதிவுகளை லிங்குவா லிப்ரே அல்லது பொதுவகத்தில் இருந்து பயன்படுத்தப்படலாம். இவை முக்கியமாக மற்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விக்சனரிகளில் சொற்களின் ஒலிப்பை விளக்குவதற்கும், விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் பெயர்களை சரியான மூலமொழி ஒலிப்பை விளக்குவதற்கும் பயன்படுகிறது. [1]

மொழி கற்பித்தல் சூழலில் பதிவுகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொழி கற்பவர்கள், ஒலிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பிரபலமான அகராதி மென்பொருளான கோல்டன்டிக்ட்-இல் (GoldenDict) பயன்படுத்தலாம். [3]

இயற்கை மொழி முறையாக்கத்திட்டங்களிலும் இப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக மொசில்லாவின் பேச்சுணரி கருவிகளை இயக்குவதற்கு பயன்படும். [4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Sabine Buchwald (2019-08-04). "Wie Wikipedia Bairisch lernt". Süddeutsche Zeitung (in ஜெர்மன்). Archived from the original on 2019-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
  2. "Lingua Libre 2.3 - Phoenix Edition ǃ". Meta Wikimedia. March 19, 2021. Archived from the original on May 7, 2021. பார்க்கப்பட்ட நாள் May 7, 2021.
  3. "LinguaLibre:Apps - Lingua Libre". lingualibre.org. Archived from the original on 2023-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
  4. "Modèle français 0.4 pour DeepSpeech v0.6". Mozilla Discourse. March 10, 2020. Archived from the original on August 10, 2020. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.