உள்ளடக்கத்துக்குச் செல்

மரபுச்சொற்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3419195 by Krishnamurthy GovindaReddy (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 118: வரிசை 118:
|கறையான்
|கறையான்
|புற்று
|புற்று
|
|-
|ஆட்டுப்
|ஆட்டுப்
|பட்டி
|பட்டி

02:14, 16 சூன் 2022 இல் நிலவும் திருத்தம்

மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு வரும் சில மரபுகள் கீழே உள்ளன.

ஒலி மரபு

உயிரினம் ஒலி(மரபு)
ஆடு கத்தும்
எருது எக்காளமிடும்
குதிரை கனைக்கும்
குரங்கு அலப்பும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
பூனை சீறும்
யானை பிளிறும்
எலி கீச்சிடும்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
கிளி பேசும்
குயில் கூவும்
கூகை குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
புறா குனுகும்
மயில் அகவும்
வண்டு முரலும்
பசு கதறும்

உயிரினங்களின் (பறவை, விலங்கு, பூச்சி) ஒலிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

வினை மரபு

பொருள் வினை(மரபு)
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
உமி கருக்கினார்
பூ பறித்தார்
மரம் வெட்டினார்
மாத்திரை விழுங்கினார்
சோறு உண்டார்
தண்ணீர் குடித்தார்
பால் பருகினார்
கூடை முடைந்தார்
சுவர் எழுப்பினார்
முறுக்குத் தின்றார்

வினை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பிடம் (மரபு)

கறையான் புற்று
ஆட்டுப் பட்டி
மாட்டுத் தொழுவம்
குதிரைக் கொட்டில்
கோழிப் பண்ணை
குருவிக் கூடு
சிலந்தி வலை
எலி வளை
நண்டு வளை

உயினங்களின் வாழ்விடம் மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

தாவர உறுப்பு (மரபு)

வேப்பந் தழை
ஆவரங் குழை
நெல் தாள்
வாழைத் தண்டு
கீரைத் தண்டு
தாழை மடல்
முருங்கைக் கீரை
தென்னங் கீற்று
கம்பந் தட்டு(திட்டை)
சோளத் தட்டு(திட்டை)

தாவரங்களின் உறுப்பு மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

இளமைப் பெயர்கள் (மரபு)

கோழிக் குஞ்சு
கிளிக் குஞ்சு
அணிற் பிள்ளை
கீரிப் பிள்ளை
பசுவின்  கன்று
நாய்க் குட்டி
புலிப் பறழ்
சிங்கக் குருளை
யானைக் கன்று
குதிரை கன்று
எருமை கன்று

விலங்குகளின் இளமை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்) ப.எண்:222 முதற்பதிப்பு-2011, மறுபதிப்பு-2016.
  2. தமிழ் மரபுச்சொற்கள் (வெளி இணைப்பு) தமிழ்ப்பேராயம் எஸ்.ஆர்.எம் பல்கலை பரணிடப்பட்டது 2017-04-30 at the வந்தவழி இயந்திரம்
  3. தொல்காப்பியம் மரபியல் (விக்கிமூலம்) உரைவளம் பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுச்சொற்கள்&oldid=3446342" இலிருந்து மீள்விக்கப்பட்டது