பயனர் பேச்சு:Yokishivam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
மறுமொழி |
Sank (பேச்சு | பங்களிப்புகள்) நில அளவை |
||
வரிசை 109: | வரிசை 109: | ||
:நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--[[பயனர்:Arafath.riyath|அராபத்]] ([[பயனர் பேச்சு:Arafath.riyath|பேச்சு]]) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC) |
:நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--[[பயனர்:Arafath.riyath|அராபத்]] ([[பயனர் பேச்சு:Arafath.riyath|பேச்சு]]) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC) |
||
::யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகிகள்]] திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! {{:)}} -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC) |
::யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகிகள்]] திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! {{:)}} -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC) |
||
=='''[[நில அளவை]]'''== |
|||
நண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC) |
12:29, 29 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், Yokishivam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--அராபத் (பேச்சு) 05:10, 18 ஏப்ரல் 2013 (UTC)
நல்வரவு
வருக! தாங்கள் எழுதி உள்ள நானும் இல்லை நீயும் இல்லை என்ற கட்டுரை கலைக்களஞ்சிய உள்ளடக்கமன்று. எனவே இது நீக்கப்பட்டுவிடும். இது குறித்து வருந்த வேண்டாம். நான் எழுதிய முதல் கட்டுரையும் நீக்கப்பட்டது. மாயை என்ற கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் விரிவாக்கலாம். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதற்காய்க் காத்திருக்கின்றன. நன்றி ! உதவிக்கு இங்கே சொடுக்கவும். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:42, 18 ஏப்ரல் 2013 (UTC)
மகிழ்ச்சி
தாங்கள் விக்கியில் கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. தாங்கள் எழுதிய கட்டுரை:நில அளவை, விக்கியில் கட்டுரை எழுதும் போது முதலில் குறைந்தது மூன்றுவரிகளை எழுதுங்கள், பிறகு நேரம் கிடைக்கும் போது மேம்படுத்தலாம், நாங்களும் உதவுவோம். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:30, 18 ஏப்ரல் 2013 (UTC)
தமிழில் எழுத
வணக்கம் யோகிசிவம் அவர்களே . விக்கியில் தாங்கள் பங்களிக்க வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் பக்களித்த நில அளவை கட்டுரையில் ஒரு வரி கூட இல்லாமையால் நீக்கினேன். தாங்கள் தட்டச்சிட முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள்
தங்களின் தொகுக்கும் பக்கத்தின் மேலே 'தமிழில் எழுத' என்ற ஒரு வாய்ப்பு உள்ளது அதில் நீங்கள் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்தால் ஒலியியல் முறையில் உதாரணமாக yoogisivam எனத் தட்டச்சிட்டால் 'யோகிசிவம்' என தமிழ் எழுத்துகள் கிடைக்கும். முயன்று பாருங்கள்.
தாங்கள் பழகி கட்டுரைகளை உருவாக்கி பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். இதற்கு பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் கிளிக் செய்து தொகுக்கவும். பின்னர் சேமியுங்கள். தங்கள் கட்டுரை முழுமையடைந்ததும் அதனை நான் உரிய இடத்திற்கு நகர்த்திவிடுகிறேன். உங்களுக்கு உதவ பிற விக்கியர்களும் உள்ளார்கள். ஏதேனும் ஐயம் எனின் இப்பக்க்த்தில் தெரிவித்தால் கூட உதவி கிடைக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:03, 20 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)
கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தங்களது பெயர் பதியப்பட்டிருக்கும் எனவே கட்டுரையில் பெயர் குறிப்பிடத்தேவையில்லை இங்கு அதைப்பார்க்கலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)
- ஐயா! விக்கியில் கட்டுரைகளைத் தொக்குத்தவரின் பெயர் இடம்பெறுவதில்லை. எனவே நீங்கள் தொகுத்த பக்கங்களில் தங்களின் கையெழுத்தை இடவேண்டாம். மேலும் உரையாடல் பக்கங்களில் தாங்கள் கையொப்பமிட விரும்பினால் 'தொகு' பக்கத்தின் நீலப்பட்டையில் மேலுள்ள எழுதுகோல் குறியீட்டை அழுத்தினால் தங்களின் கையொப்பம் பதிவாகிவிடும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 20 ஏப்ரல் 2013 (UTC)
'சத்தியவதி' தொடர்ந்து தொகுக்க முடியுமா?யோகிசிவம்
- எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 07:00, 22 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி சங்கீர்த்தன் அவர்களே! உள் தலைப்பிடுவது குறித்து ஆலோசனை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.--14.195.51.0 07:23, 22 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம் பார்வதிஸ்ரீ அவர்களே!தாங்கள் வழங்கிய ஆலோசனைப் படி பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் நில அளவை என்ற கட்டுரை தொகுக்கப் பட்டது சேமித்தேன் காணவில்லை.--14.195.51.0 07:33, 22 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம்
வணக்கம் ஐயா! நீங்கள் ஒவ்வொரு முறையும் புகுபதிகை செய்தபின்பு தொகுக்க ஆரம்பிக்கவும். அப்பொழுதுதான் தங்கள் பெயருடன் கையொப்பம் பதிவாகும். மேலும் நீங்கள் அப்பக்கத்தைச் சரியாக சேமிக்கவில்லை என நினைக்கிறேன். பயனர்:Yokishivam/test தற்போது இந்தப் பக்கத்தைத் தொகுத்துச் சேமியுங்கள். விக்கிப்பீடியாவிற்கேற்ப பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
உள் தலைப்பிடுவதற்கு (== தலைப்பு ==), (=== தலைப்பு ===, (=== தலைப்பு ===)) என்பனவற்ருள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தொகுக்கும் பக்கத்தின் மேலுள்ள A , A என்று தொடங்கும் பட்டையில் கருவிகள் ஒவ்வொன்றையும் செயற்படுத்திப் பார்க்கவும். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:44, 22 ஏப்ரல் 2013 (UTC)
பதக்கம்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
கட்டுரைகளில் புதிதாக தகவல்களைச் சேர்த்து அசத்துகிறீர்கள்! உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம் தமிழ்க்குரிசில் அவர்களே! விக்கிப்பீடியாவிற்கு புதிய பயனர் நான் எனக்குள்ள படிப்பறிவு,பட்டறிவு இரண்டையும் மேம்படுத்த அறிவுசார் உலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் அவ்வளவே. எனது முதல் கட்டுரையின் தலைப்பு தொகுக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தம்.அதுதான் என்னை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு எழுதத் தூண்டுகிறது.புதிய தலைப்புக் கட்டுரையை தொகுக்க வேண்டும்!!!.நன்றி- யோகிசிவம்
- சத்தியவதி கட்டுரையில் பல தகவல்கள் தங்களுடையதே! அருமையாக உள்ளது. மேலும் பல கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து உதவுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:17, 24 ஏப்ரல் 2013 (UTC)
அன்புத் தோழரே!(இப்படி அழைப்பதில் தவறில்லையே?)சத்தியவதியில் எனக்கு தெரிந்த தகவல்களை சொல்லியுள்ளேன்.மகாபாரத்தில் உள்ள எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளின் தகவல்களை சத்தியவதியில் சொல்லிவிட்டால் தகவல்களை திரும்ப,திரும்ப படிக்கிறபோது சலிப்பாகிவிடும்!!எனவே சத்தியவதியை உரைதிருத்தியும்,உரிய இடத்திற்கு நகர்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி --யோகி சிவம் 07:37, 24 ஏப்ரல் 2013 (UTC)--115.118.93.15 07:27, 24 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் உங்கள் விருப்பப்படியே அழையுங்கள்!! மேலும் தகவல்கள் தந்து உதவுங்கள். தமிழக அரசு, தமிழகரசின் துறைகள், தமிழ்நாடு புவியியல் தொடர்பான கட்டுரைகளைக் கண்காணித்து உரை திருத்தித் தர வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 24 ஏப்ரல் 2013 (UTC)
அன்புத் தோழர்களே! (தமிழ்க்குரிசில்,பார்வதிஸ்ரீ)அல்லது தமிழ் விக்கியன்பு நண்பர்களே! சத்தியவதியை உரிய இடத்திற்கு நகர்த்தவும்.--யோகி சிவம் 13:17, 24 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் (பேச்சு)
சத்தியவதியில் இருந்த பாண்டவர்கள், கௌரவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள்
பக்கங்களிற்கு நகர்த்தியாயிற்று
- வியாசர் (அந்தப்பக்கத்திற்கு போக நீல நிறத்தில் உள்ளதலைப்பை சொடுக்கவும் ) எனும் பக்கம் விக்கியில் உண்டு வியாசர் தொடர்பான தகவல்களை அங்கு சேருங்கள், நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:33, 24 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி!சங்கீர்த்தன் அவர்களே! குருங்கட்டுரை பகுப்பில் சத்தியவதி இருக்கிறாள்!?.கொஞ்சம் கவனியுங்கள்.--யோகி சிவம் 03:17, 25 ஏப்ரல் 2013 (UTC) (பேச்சு
- அதை தமிழ்க்குரிசில் சரிசெய்து விட்டார்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC)
உதவி
இந்த வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை முடிந்தால் விரிவுபடுத்தி உதவுங்களேன்..:)
--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழர்கள்! சங்கீர்த்தன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் நன்றி!! நான் ஏற்கனவே தமிழ்க்குரிசில் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.கூடிய விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.எனக்கு தட்டச்சு செய்வது மிகவும் தாமதமாகிறது.தற்போது தட்டச்சு பயிற்சி பெற தொடங்கியுள்ளேன்.விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.நன்றி!--யோகி சிவம் 17:55, 25 ஏப்ரல் 2013 (UTC)பயனர்:யோகிசிவம் (பயனர் பேச்சு:யோகிசிவம்பேச்சு)
தங்கள் பார்வை தேவை
ஐயா இந்தப்பக்கங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். தங்களுக்கு உதவியாய் இருக்கும்.
நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:23, 26 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி பார்வதிஸ்ரீ அவர்களே!--யோகி சிவம் 15:11, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)
- நீங்கள் விரும்பினால், கையெழுத்தில் உங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம் (பயனர் பெயர் மாறாது. கையொப்பத்தில் மட்டும் விரும்பிய பெயரை வைத்துக்கொள்ளலாம்.). சிலர் வெவ்வேறு வண்ணங்களிலும், குறியீடுகளிலும் அழகழகான கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்ன! உங்களுக்கும் விருப்பம் தானே!!!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 26 ஏப்ரல் 2013 (UTC).
- விருப்பம் நன்றி! தமிழ்க்குரிசில் அவர்களே!-- 16:18, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)
காமன்சு/ஊடக நடுவம்
வணக்கம்! தங்கள் கட்டுரைகளில் அழகாக படங்கள் சேர்க்கலாம். கட்டுரைக்கு அழகு சேர்க்கும். பெரும்பாலும் பொதுவான தலைப்புகள் தொடர்புடைய படங்கள் காமன்சில் கிடைக்கும். Wikimedia Commons என்பதை விக்கி ஊடக நடுவம் என்று அழைக்கிறோம். இங்கே பல படங்கள், ஒலிக் கோப்புகள், காணொளி நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பது உட்பட பல்வேறு நாடுகளைப் பற்றிஉஅ ஊடகங்கள் நிறையவே உள்ளன, அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். :) இங்கே சென்று தேடல் பெட்டியில் விரும்பிய தலைப்புகளைத் தேடுங்கள் படங்கள் கிடைக்கும். அந்த படத்தின் பெயரை இங்கே இணைத்தால் படம் கிடைக்கும். பொதுவான தலைப்புகளில் படங்கள் கிடைக்கும். மகாபாரத கதாபாத்திரங்களின் படங்களும் காட்சிகளும் நிறையவே இருக்குமென்று நினைக்கிறேன். பயனுள்ளதாய் இருக்கும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 26 ஏப்ரல் 2013 (UTC)
- வணக்கம்! தமிழ்க்குரிசில் அவர்களே ஆங்கிலப் புலமையும்,பாண்டியத்தியமும் எனக்கில்லை இங்கே அனைத்தும் ஆங்கிலத்திலுள்ளது.தேவையான படங்களை தாங்களே சேர்த்து விடுங்கள் நன்றி!--யோகி சிவம் 03:18, 27 ஏப்ரல் 2013 (UTC)
மறுமொழி
இதற்கு ஆங்கிலப் புலமை தேவை இல்லை :) அங்கு சென்று preferences (விருப்பத்தேர்வுகள்) ஐ மாற்றிக் கொள்ளலாம். மேலே வலப்பக்கம் உங்கள் பெயருக்கு அடுத்து இருக்கும். (முதலில் அங்கும் நீங்கள் இதே யோகிசிவம் என்ற பெயருடன் புக வேண்டும். அப்போதுதான் மேலே கூறியவை தெரியும்!!!) விருப்பத்தேர்வுகளில் மொழி என்பதில் தமிழைத் தேர்வு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவது போலவே எல்லாம் தமிழிலேயே தெரியும். ஆங்கிலம் ஒரு மேட்டரே இல்லை!! நான் கன்னட விக்கிப்பீடியாவையே தமிழில் தான் பார்க்கிறேன். :) (ஒருவேளை சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கலாம். அப்படி பார்த்தால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறேன்.)
- இன்னொரு விசயம், புது பத்தியாக எழுத இடைவெளி விட வேண்டாம். அரைப்புள்ளியை (:) இட்டு வரியைத் தொடங்கினால் அதுவே இடம் விட்டு காட்டும். தற்போதைக்கு நானே படங்களை இணைக்கிறேன். நீங்களும் அங்கு பழகிப் பாருங்கள். இங்கே நிறைய கருவிகள் உள்ளன. விரைவில் ஒவ்வொன்றாய் பார்ப்போம். நன்றி!-04:12, 27 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி! தங்கள் பேச்சு புது தெம்பு ஊட்டுகிறது,விக்கியில் உலாவுவது 18 ஏப்ரல் 2013 என்பதால் மன நடுக்கம் உள்ளது.கணிணி தமிழ் எனக்கு? எதையாவது சொடுக்கி ஏதும் தவறு நடந்து விட்டால் விக்கியர்கள் உழைப்பு வீணாகும் என்ற மன பயம் உள்ளது. ஒரு முறை தங்களை நேரில் சந்தித்து உரையாடினால் ஓரளவு தேரிவிடுவேன்.--யோகி சிவம் 04:44, 27 ஏப்ரல் 2013 (UTC)
மறுமொழி
நான் இங்கு வந்த புதிதில் ஓரளவுக்கே தமிழில் எழுதத் தெரியும். (ஆங்கில வழியில் படித்தேன்.) விக்கி தொழில்நுட்பமும் புதிது, தமிழ்ச் சொற்களும் புதிது. ஒன்றுமே புரியவில்லை. இருக்குற எல்லா ஆப்ஷன்களையும் அமுக்கி விளையாடிட்டேன். :) பின்னர் ஒவ்வொரு பயனரும் உதவி செய்தனர். ஊக்கப்படுத்தினர். நானும் பேச்சுப் பக்கங்களில் கலாய்ப்பதும் எனக்கு தெரிந்ததை சொல்லியும் காலத்தை ஓட்டினேன்.
- வந்து சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. நல்ல தமிழில் எழுதக் கற்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் எனது கருத்துக்களைச் சொல்லி, பிறர் கருத்துக்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். பின்னர், ஆங்கிலத்தில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்தேன். பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும் தலையைக் காட்டினேன். தமிழின் பிற விக்கிமீடியா திட்டங்களிலும் தலையைக் காட்டினேன். பல கருவிகளை இயக்கக் கற்றுக் கொண்டே. (இவை என்ன என்று பிறகு சொல்கிறேன்.)
- கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தை கவனியுங்கள். என்ன உரையாடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லித் தாருங்கள். புதியவர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுங்கள்.
- இங்கு உள்ள நடைமுறைகள் கடினமாக இருக்கலாம். சில நாட்களில் பழகிவிடும். எதற்கும் தயங்க வேண்டாம். தவறாக செய்துவிட்டாலும், மீளமைத்தல் என்ற வசதியின் மூலம் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். உழைப்பு வீணாகாது :) எப்போது சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். பதில் சொல்வோம். எங்காவது தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 27 ஏப்ரல் 2013 (UTC)
உதவி
- அன்புத் தோழர்கள்! தமிழ்க்குரிசில்,சங்கீர்த்தன்,ஆகியோருக்கு வணக்கம்!! மகாபாரத்தில் உள்ள குறுங்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள்ளது,அவற்றை Google வலையில் காண்பது எப்படி? தயவு செய்து உதவுங்கள். --யோகி சிவம் 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)
- நான் அறிந்தவரையில், விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை உருவானால், அது மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் சிக்கும். நேற்றோ, இன்றோ உருவான கட்டுரை என்றால், சில நாட்கள் பொறுத்திருங்கள்.
(நீங்கள் கூகுளில் தேடும் சொல் விக்கிப்பீடியாவில் இருந்தால், தேடலின் முதல் முடிவாக விக்கி கட்டுரை தெரியும்.) -தமிழ்க்குரிசில்
வலைவாசல் சத்தியவதி
தோழரே, சத்தியவதிக்கு வலைவாசலா!!! வலைவாசல் என்பது குறிப்பிட்ட ஒரு தலைப்புகளில் அல்லது பகுதிகளில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இங்கு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரால் மட்டும் வலைவாசல்கள் உருவாக்க முடியாது. வேண்டுமெனில், வலைவாசல்:மகாபாரதம் உருவாக்கலாம். மற்றவர்களும் உதவுவர்.--அராபத் (பேச்சு) 04:28, 29 ஏப்ரல் 2013 (UTC)
அன்புத் தோழரே வணக்கம்!!எனது பேச்சுப் பக்கத்தில் தோழர் தமிழ்க்குரிசில் எனக்கு மறுமொழியில் சொன்ன உலாவுதலில் வந்த விளைவு! மகாபாரதத்தில் உள்ள குருங்கட்டுரைகளை தொகுத்தேன்.எனது நண்பர்கள் நச்சரிப்பால் அவற்றை google வலைப்பகுதிக்கு நகர்த்த எடுத்த முயற்சியால் விளைந்தது தான் வலைவாசல் சத்தியவதி மீண்டும் சத்தியவதியாகவே மாற்றிவிட்டேன். --யோகி சிவம் 05:07, 29 ஏப்ரல் 2013 (UTC)
- நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--அராபத் (பேச்சு) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC)
- யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ நிர்வாகிகள் திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC)
நண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC)