உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25: வரிசை 25:


===சூழல்===
===சூழல்===
[[File:Parcs naturels français.svg|thumb|left|பிரான்சில் உள்ள [[பிரான்சின் பிரதேச இயற்கைப் பூங்காக்கள்|பிரதேச]] (பச்சை), [[பிரான்சின் தேசியப் பூங்காக்கள்|தேசிய இயற்கைப் பூங்காக்கள்]] (இளஞ்சிவப்பு).]]
[[File:Parcs naturels français.svg|thumb|left|பிரான்சில் உள்ள [[பிரான்சின் பிரதேச இயற்கைப் பூங்காக்கள்|பிரதேச]] (பச்சை), [[பிரான்சின் தேசியப் பூங்காக்கள்|தேசிய (இளஞ்சிவப்பு) இயற்கைப் பூங்காக்கள்]].]]
சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது.
சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது.



17:51, 13 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பிரெஞ்சு குடியரசு
République française
கொடி of பிரான்சின்
கொடி
குறிக்கோள்: Liberté, Égalité, Fraternité
பிரெஞ்சு:Liberty, Equality, Fraternity
நாட்டுப்பண்: La Marseillaise
பிரான்சின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பரிஸ்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்ஒருமுக அரசு
• அதிபர்
இம்மானுவேல் மாக்ரோன்
• பிரதமர்
எடுவர்ட் ஃபிலிப்
நிறுவப்படுதல் 
843(வெர்டுன் ஒப்பந்தம்)
பரப்பு
• மொத்தம்
674,843 km2 (260,558 sq mi) (40வது)
• நீர் (%)
தகவல் சேர்க்க
மக்கள் தொகை
• சனவரி 2006 மதிப்பிடு
63,587,700 (20வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.830 டிரில்லியன் (7வது)
• தலைவிகிதம்
$29,316 (20வது)
மமேசு (2003)0.938
அதியுயர் · 16வது
நாணயம்ஐரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அழைப்புக்குறி33
இணையக் குறி.fr

பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வட கடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது.

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது.

பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. இந் நாட்டின் முக்கியமான குறிக்கோள்கள் மனிதரினதும் குடிமக்களதும் உரிமைகள் சாற்றுரையில் அடங்கியுள்ளன. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வாங்கு திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரியது. திரட்டிய வீட்டுச் செல்வ அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது.

பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.

பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

பெயர்

பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது. பிரான்சு என்பது, "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள்தரும் பிரான்சியா (Francia) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. பிராங்க் என்னும் சொல்லின் பிறப்புக் குறித்துப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. ஒரு கொள்கையின்படி, பிராங்க் மக்கள் பயன்படுத்தியதும் முன்-செருமானிய மொழியில் பிராங்கோன் என்று வழங்கியதுமான எறிகோடரியின் பெயரில் இருந்து பிராங்க்குகளுக்குப் பெயர் ஏற்பட்டது. பண்டைச் செருமானிய மொழியில் பிராங்க் என்பது அடிமைகள் அல்லாத விடுதலை கொண்ட மக்களைக் குறித்தது என்றும், இதுவே பிராங்குகளுக்கு அப்பெயர் ஏற்படக் காரணமாகியது என்றும் இன்னொரு கொள்கையின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

புவியியல்

பிரான்சின் கடல் கரையொன்று

பிரான்சு அகலக்கோடுகள் 41° வ, 51° வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 6° மே, 10° கி ஆகியவற்றுக்கும் இடையில் ஐரோப்பாவின் மேற்குப்பகுதி விளிம்போரமாக அமைந்துள்ளது. இது வட மிதவெப்ப வலயம் ஆகும்.

பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி (பிரான்ஸ் பெருநிலப்பரப்பு) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போதும், பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா, கரிபியா, தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம், அந்தார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சிப் பகுதிகள் பல்வேறு அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன.

லச்டெசு காட்டின் 100 மைல் நீளமான கடல் கரை

ஐரோப்பாவில் 547,030 ச. கிலோமீட்டர் (211,209 ச. மைல்) பரப்பளவு கொண்ட பிரான்சின் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது. பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை).[1] மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடற் காலநிலை நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய பெருங்கடற் காலநிலை காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட கண்டக் காலநிலை உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும்.

சூழல்

பிரான்சில் உள்ள பிரதேச (பச்சை), தேசிய (இளஞ்சிவப்பு) இயற்கைப் பூங்காக்கள்.

சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது.

பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் போலவே, பிரான்சும், 2020 ஆம் ஆண்டளவில், காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டின் நிலையில் 20% ஐக் குறைப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா 4% குறைப்பதற்கே சம்மதித்து உள்ளது.

2009 ஆம் ஆண்டில், ஒரு தொன் காபனீரொட்சைடு வெளியேற்றத்துக்கு 17 யூரோக்கள் வீதம் கரிம வரி ஒன்றை விதிப்பதற்கும் பிரான்சு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் 4.3 பில்லியன் யூரோக்கள் வருமானமாகக் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வரியினால், பிரான்சு நாட்டு நிறுவனங்கள் பிற அயல் நாட்டு நிறுவனங்களுடன் சமநிலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் பிற காரணங்களினாலும் இந்த வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக் கழகத்திலும், கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூடிய சூழல் உணர்வு கொண்ட நாடுகள் வரிசையில் பிரான்சுக்கு ஏழாவது இடம் கிடைத்தது.

பிரான்சின் நிலப்பரப்பில் காடுகள் 28% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடிய காடுகளைக் கொண்ட நாடுகளில் பிரான்சு இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்சின் காடுகளிற் சில ஐரோப்பாவில் கூடிய பல்வகைமை கொண்ட காடுகளுள் அடங்குகின்றன. இவற்றில் 140க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மர வகைகள் உள்ளன. பிரான்சில் 9 தேசியப் பூங்காக்களும், 46 இயற்கைப் பூங்காக்களும் உள்ளன.

வரலாறு

பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர்.

குறிப்புகள்

  1. According to a different calculation cited by the Pew Research Center, the EEZ of France would be 10,084,201 square kilometres (3,893,532 sq mi), still behind the ஐக்கிய அமெரிக்கா (12,174,629 km² / 4,700,651 sq mi), and still ahead of Australia (8,980,568 km² / 3,467,416 sq mi) and Russia (7,566,673 km² / 2,921,508 sq mi).

வெளியிணைப்பு

பிரான்சு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி



"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சு&oldid=1188537" இலிருந்து மீள்விக்கப்பட்டது