1922
1922 (MCMXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1922 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1922 MCMXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1953 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2675 |
அர்மீனிய நாட்காட்டி | 1371 ԹՎ ՌՅՀԱ |
சீன நாட்காட்டி | 4618-4619 |
எபிரேய நாட்காட்டி | 5681-5682 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1977-1978 1844-1845 5023-5024 |
இரானிய நாட்காட்டி | 1300-1301 |
இசுலாமிய நாட்காட்டி | 1340 – 1341 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 11 (大正11年) |
வட கொரிய நாட்காட்டி | 11 |
ரூனிக் நாட்காட்டி | 2172 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4255 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 11 - நீரிழிவு நோய் மருந்தாக இன்சுலின் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- பெப்ரவரி 5 - ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் வெளியிடப்பட்டது.
- மார்ச் 11 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.
- மே 12 - 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
- ஆகஸ்ட் 28 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
- நவம்பர் 14 - பிபிசி ஐக்கிய இராச்சியத்தில் தனது வானொலி சேவையை ஆரம்பித்தது.
- நவம்பர் 26 - எகிப்திய மன்னன் துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
- டிசம்பர் 16 - போலந்துத் அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 30 - ரஷ்யா, உக்ரேன், பெலாரஸ், மற்றும் ட்ரான்ஸ்கவ்காசியா ஆகியன இணைந்து சோவியத் குடியரசுகள் ஆயின.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 14 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
- மே 5 - டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை
- மே 23 - பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)
- டிசம்பர் 19 - கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
இறப்புகள்
தொகு- ஆகஸ்ட் 2 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (பி. 1847)
- டிசம்பர் 27 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)