ஹாசன் மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்

ஹாசன் (ஆங்கிலம்: Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த போசளப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹோய்சாலேஸ்வரர் கோவில் மற்றும் கேதாரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இவைகள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இங்குள்ள சரவணபெலகுளா என்ற இடத்தில் அமைந்த பாகுபலி சிலை சமணர்களின் புகழ்பெற்ற தலம் ஆகும். ஹாசன் மாவட்டம் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் (Master Control Facility) இங்கு அமைந்துள்ளது.

ஹாசன் மாவட்டம்
ಹಾಸನ ಜಿಲ್ಲೆ
Male Nadu
மாவட்டம்
லெட்சுமி நரசிம்மர் கோவில் 1246 திரிகூட கட்டிடக்கலை, நுக்கிஹல்லி
லெட்சுமி நரசிம்மர் கோவில் 1246 திரிகூட கட்டிடக்கலை, நுக்கிஹல்லி
நாடு இந்தியா
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Karnataka
தலைமையகம்ஹாசன்
தாலுகாஹாசன், ஒலெநார்சிப்பூர், ஆர்க்கல்குட், சன்னராயனப்பட்டினம், சக்லேசுப்பூர், பேளூர், அலூர், ஆரசிக்கெரே
மொழிகள்
 • ஆட்சி மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அகுஎ
573 201
தொலைபேசிக் குறியீடு08172
வாகனப் பதிவுKA-13, KA-46
இணையதளம்www.hassan.nic.in

தொகுதிகள்/ தாலுகாக்கள்

தொகு

ஹாசன் மாவட்டத்தில் மொத்தம் எட்டுத் தொகுதிகள் உள்ளன, அவை:

வரலாறு

தொகு

ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான மேற்குக் கங்கப் பேரரசு (350999 கி.பி) மற்றும் போசளப் பேரரசுடனும் (1000–1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் ஷிமொகாவின் கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது.

பண்டையகால வரலாறு

தொகு

கிமு 300-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஹாசன் மாவட்டம் மௌரியப் பேரரசில் ஓர் அங்கமாக இருந்தது. மேலும் கிமு 3-ம் நூற்றாண்டுகளில் பத்ரபாஹு முனிவருடன் வந்த பல துறவிகளால் சமண மதம் கர்நாடகத்தில் காலடி பதித்தது. மன்னர் அசோகரின் பாட்டனாரான சந்திரகுப்த மௌரியர் பத்ரபாஹு முனிவரின் சீடர் என்றும் அவர் ஆட்சியைத் துறந்து துறவற வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு பத்ரபாஹு முனிவருடன் ஷரவணபெலகொலாவில் தங்கினார் என்றும் ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மற்றைய தரப்பினர் இதற்கு மாறாகப் பத்ரபாஹு முனிவருடன் வந்தது மன்னர் அசோகரின் பேரன் என்றும் கூறுகின்றனர். இவ்விடத்தில் சந்திரகுப்தரின் நினைவாகச் சந்திரகுப்த பாசடி என்ற சமணர்களின் கோவில் உள்ளது. ஓரு சில வரலாற்று வேற்றுமைகள் இருந்தாலும்கூட இருபத்து மூன்று நூற்றாண்டுகள் சமணர்களின் வழிபாட்டுத்தலமாக ஹாசன் மாவட்டத்திலுள்ள ஷரவனபெலகொலா விளங்கியதற்கு இதுவே சான்றாகும்.

இடைக்கால வரலாறு

தொகு

இம்மாவட்டம் இடைப்பட்ட காலத்தில் அதாவது கிபி 350கிபி 550 வரை கங்கப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முதலில் கங்கப் பேரரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் காலப்போக்கில் சாளுக்கியரிடமும் மற்றும் இராஷ்டிரகூடரிடமிருந்தும் கப்பம் வசூலித்து மறைமுகமாக ஆட்சி செய்தது. சுமார் 10-ஆம் நூற்றாண்டில் கங்கப் படைத் தளபதி சமுன்தரயரால் ஷ்ரவனபெலகொலாவில் பல சமணக் கோவில்கள் கட்டப்பட்டன. இதில் ஒரே பாறையில் (Monolithic) செதுக்கப்பட்ட கோமதிஷ்வரரின் சிலையும் அடங்கும். சுமார் 800-இற்கும் மேல் கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், மராட்டி, மார்வாரி மற்றும் மஹாஜனி ஆகிய மொழிகளில் ஏட்டுச்சுவடி மற்றும் கல்வெட்டுக்களில் ஒவ்வொரு கன்னடப் பேரரசின் ஆட்சியைப் பற்றியும் சமண மதத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. புகழின் உச்சியில் இருந்த கங்கப் பேரரசை கி.பி. 1000-ஆம் ஆண்டு சோழப் பேரரசின் அரசனான முதலாம் இராசராச சோழனால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின் மேற்கு கங்கப் பேரரசு இம்மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து மறைந்துபோனது.

ஹாசன் மாவட்டத்தைச் சோழப் பேரரசிடமிருந்து 1118-ஆம் ஆண்டு போசளப் பேரரசு கைப்பற்றியது. போசளப் பேரரசு ஆட்சியின் கீழ் இம்மாவட்டம் வளர்ச்சி அடைந்தது. ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது ஹாசன் மாவட்டத்திலுள்ள பேளூர். போசள மன்னன் விஷ்ணுவர்தனனால் கீர்த்தி நாராயண கோவில் மற்றும் புகழ் பெற்ற சென்னகேசவப் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. பின்பு 1343-ஆம் ஆண்டு போசள மன்னன் மூன்றாம் வீர பல்லாலாவின் மரணத்திற்கு பிறகு போசளப் பேரரசு விஜயநகரப் பேரரசுடன் இணைந்தது. விஜயநகரப் பேரரசு முடிவுக்குவரும் வேளையில் இம்மாவட்டம் 1565-ஆம் ஆண்டு மைசூர்ப் பேரரசுடன் இணைந்தது.

இறுதியில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் இந்திய நாட்டுடன் இணைந்தது.

போசளர் கட்டிடக்கலை

தொகு

ஹாசனின் வரலாற்று ஏடுகளில் ஹொய்சாலர்கள் சகாப்தம் முடிந்திருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற கன்னடக் கலாச்சாரம், கன்னட இலக்கியம் மற்றும் வேசர பாணியிலுள்ள கட்டிடக்கலை இன்றும் என்றும் காலத்தால் அழிக்க முடியாத அத்தியாயமாகவே உள்ளது. பதமி சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டுப் பின்பு கல்யாணி சாளுக்கியர்களால் மேலும் மெருகேற்றப்பட்ட வேசர பாணியில் ஹோய்சாலர்களின் கற்கோவிற் கட்டிடக்கலை அமைந்துள்ளதாக வரலாற்று வல்லுனர்களான ஹென்றி கௌசென்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃபெர்கூசன் ஆகியோர் கூறுகின்றனர். இக்கோவில்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மிக மென்மையான சோப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. போசளர் கட்டிடக்கலையின் மாட்சியைப் பேளூர், ஹளபீடு, மற்றும் சோமநாதபுரம் ஆகிய ஊர்களில் காணலாம்.

புவியியல்

தொகு

இம்மாவட்டம் இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இதன் அமைவிடம் சுமார் 12° 13´ இருந்து 13° 33´ வரையிலான வடக்கு அட்சரேகைக்கும் (North latitude) மற்றும் 75° 33´ இருந்து 76°38´ வரையிலான கிழக்கு தீர்க்கரேகைக்கும் (East Longitude)இடையில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை உள்ள தூரம் சுமார் 129 கிமீ, மேற்கு முனையிலிருந்து கிழக்கு முனை வரை உள்ள தூரம் சுமார் 116 கிமீ ஆகும். மொத்த பரப்பளவு 6826.15 சதுர.கி.மீ.

புவி அமைப்பு

தொகு

புவியியல் ஆசிரியர்கள் ஹாசன் மாவட்டத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஆவை,

நீர் வடிகால்கள்

தொகு
 
ஹேமாவதி ஆறு

இம்மாவட்டம் ஹேமாவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சக்லெஷ்புர் வட்டத்திலுள்ள மன்ஜாராபாத் என்ற ஊர் வழியாக இம்மாவட்டதிற்குள் நுழையும் இவ்வாறு பின் கிழக்கு நோக்கிச் சென்று ஹாசன் மற்றும் அரகல்கூடு வட்டங்களூடு சென்று பின் ஹொலென்னரஸிபுரா வழியாக இம்மாவட்டத்தை விட்டு மைசூரை நோக்கிச் செல்கிறது. இறுதியில் ஹேமாவதி ஆறு காவிரி ஆற்றுடன் மைசூரில் சேர்கிறது.

ஹேமாவதி ஆற்றின் முக்கிய துணைநதி (tributary) பேளூரில் உற்பத்தியாகும் யகசி ஆறாகும். யகசி ஆறு ஹாசன் வட்டத்திலுள்ள கோரூர் என்னும் ஊரில் ஹேமாவதி ஆற்றுடன் கலக்கின்றது. இம்மாவட்டத்தின் தெற்கில் அதாவது அரகல்கூடு வட்டத்தின் தெற்கு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இதுதவிர நேத்திராவதி மற்றும் வேதவதி ஆறுகளின் பல சிரிய துணை நதிகள் இம்மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உருவாகின்றன.

காலநிலை

தொகு

ஹாசனின் காலநிலையானது வெயில் காலங்களில் மிதமான வெப்பமுடனும் மழைக்காலங்களில் மிதமான குளுமையுடனும் இருக்கும். இங்கு ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிக அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இம்மாதத்தில் வெப்பநிலையின் அதிகளவு சுமார் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த அளவு சுமார் 20 டிகிரி செல்சியஸ் ஆகும். ஒரு ஆண்டின் சராசரி மழையளவு 700 மில்லி மீட்டராகும். இதில் மலைநாடு பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 17,21,669 மக்கள் வசிக்கின்றார்கள் இவர்களில் 3,04,673 மக்கள் நகரங்களிலும் 14,16,996 மக்கள் கிராமபுரங்களிலும் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தில் பாலின சதவிகிதம் 1,004 ஆகும் மற்றும் மக்களின் சராசரி கல்வியறிவு 60.67% ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 251 மக்கள் வசிக்கின்றனர். மேலும் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் 9.66 % அக உள்ளது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டத்திற்கு சுற்றுலா மற்றும் காபி சாகுபடியிலிருந்து வருமானம் கிடைக்கிறது. மலைநாடுப்பகுதியான சக்லேஷ்புரில் காபி விளைகிறது. இது தவிர கருப்பு மிளகு, நெல் மற்றும் கரும்பு இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஹாசன் மாவட்டத்தில் மொத்தம் 45 வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்ஹ் தலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கபடுகிறது. இதில் 24 சுற்றுலாத் தளங்களை கர்நாடக மாநில தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தாலும் மீதம் உள்ள 21 சுற்றுலா தளங்களை இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தாலும் பாதுகாக்கப்படுகிறது.

கலாச்சாரம்

தொகு

காலப்போக்கில் சமண மதத்தின் ஆதிக்கம் குறைந்திருந்தாலும், இம்மாவட்டத்தில் சமண மற்றும் இந்து சமயத்தின் கலாச்சாரம் பழக்கத்தில் உள்ளன. இம்மாவட்டத்தின் மத சகிப்புதன்மைகான அடையாளம் இம்மாவட்டத்தில் கோமதேஸ்வரருக்கு நடக்கும் மகாமச்டகப்திஷேகம் ஆகும். இன்று ஒரு பெரிய விவசாய சமூகமாக ஹாசன் இருந்தாலும், இது ஒரு காலத்தில் இருப்பெரும் பேரரசின் தலைநகரமாக விளங்கியதற்கு இவ்வூரிலுள்ள பழங்கால கோவில்களும் வரலாற்று சிறப்புமிக்க ஹோய்சாளர் கட்டிடகலைகளே சான்றாகும். இவ்வூரின் சமையல் மைசூர், குடகு மற்றும் தட்சிண கன்னட சமயர்கலைகளின் கலவை ஆகும். மேலும் ஹாசன் ஏழைகளின் உதகை என்றும் அழைக்கப்படுகின்றது.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hassan district
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாசன்_மாவட்டம்&oldid=3890857" இலிருந்து மீள்விக்கப்பட்டது