ரோலண்ட் ஹில்

ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.[1]

ரோலண்ட் ஹில்
பிறப்பு3 திசம்பர் 1795
கிடடெர்மின்ஸ்டெர்
இறப்பு27 ஆகத்து 1879 (அகவை 83)
Hampstead
கல்லறைHighgate Cemetery
பணிஅரசியல்வாதி, புத்தாக்குனர்
வாழ்க்கைத்
துணை/கள்
Caroline Pearson
குடும்பம்Matthew Davenport Hill, Arthur Hill, Edwin Hill, Frederic Hill
விருதுகள்ஆல்பெர்ட் பதக்கம்
ரோலண்ட் ஹில்

ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது.

எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது.தபாலதிபர் நாயகமாக (Postmaster general) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது.

குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "HILL, SIR ROWLAND (1795-1879)". The Encyclopaedia Britannica; A Dictionary of Arts, Sciences, Literature and General Information. Vol. XIII (HARMONY to HURSTMONCEUAX) (11th ed.). Cambridge, England: At the University Press. 1910. pp. 465–466. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோலண்ட்_ஹில்&oldid=3855959" இலிருந்து மீள்விக்கப்பட்டது