போர்னியோ
போர்னியோ (மலாய்: Borneo; ஆங்கிலம்: Borneo சாவி: ; بورنيو; சீனம்: 婆罗洲) என்பது உலகின் மூன்றாவது பெரிய தீவு; அதே வேளையில் ஆசியாவின் மிகப் பெரிய தீவாகும். கடல்சார் தென்கிழக்காசியா புவியியல் மையத்தில் அமைந்துள்ளது. தெற்கே சாவா, சுமத்திரா, சுலாவெசி தீவுகள் உள்ளன.
போர்னியோவின் நிலப்பரப்பு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°00′N 114°00′E / 1.000°N 114.000°E |
தீவுக்கூட்டம் | சுந்தா பெருந் தீவுகள் |
உயர்ந்த புள்ளி | கினபாலு மலை |
நிர்வாகம் | |
மாவட்டங்கள் | பெலாயிட் புரூணை-முவாரா டெம்புரோங் டூடொங் |
பெரிய குடியிருப்பு | சமாரிண்டா (pop. 842,691) |
மாநிலங்கள் | மேற்கு கலிமந்தான் மத்திய கலிமந்தான் தெற்கு கலிமந்தான் வடக்கு கலிமந்தான் கிழக்கு கலிமந்தான் |
மாநிலங்கள் | சபா சரவாக் |
மக்கள் | |
மக்கள்தொகை | 16 மில்லியன் (2000) |
மலாய் தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்து இருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமைகளில் உள்ளது.[1]
இந்தத் தீவின் இந்தோனேசியாவின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியை கலிமந்தான் என்று அழைக்கிறார்கள். வடக்குப் பகுதியில் மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் உள்ளன. அவற்றைக் கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்று அழைக்கிறார்கள்.
அமேசான் காடுகளைப் போன்று போர்னியோ தீவுக் காடுகளும் உலகின் மிகப் பழமையான மழைக்காடுகள் ஆகும்.[2]
புவியியல்
தொகுஇந்தத் தீவின் 73% இந்தோனேசியப் பிரதேசமாகும். வடக்கில், கிழக்கு மலேசிய மாநிலங்களான சபா மற்றும் சரவாக் தீவின் 26% ஆகும். மலேசிய கூட்டாட்சி பிரதேசமான லபுவான் தீவு, போர்னியோ கடற்கரையில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது.
போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள புரூணை நாடு போர்னியோவின் நிலப்பரப்பில் சுமார் 1% ஆகும்.
உலகின் பழமையான மழைக்காடுகள்
தொகுபோர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுலு கடல், கிழக்கே சுலாவெசி கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே சாவகக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன.
போர்னியோவின் மேற்கே மலாய் தீபகற்பம், மற்றும் சுமாத்திரா தீவு உள்ளன. தெற்கே சாவாவும், வடகிழக்கே பிலிப்பீன்சு ஆகியன உள்ளன. போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக் காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.
உலகின் நீளமான நிலத்தடி ஆறு
தொகுகினபாலு மலை என்பது இந்தத் தீவின் உயரமான மலை ஆகும். உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு (Kapuas River) இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு.
இந்தத் தீவில் குறிப்பிட்டத்தக்க குகை அமைப்புகளும் கோமந்தோங் குகைகள் உள்ளன. உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளது. மான் குகை (Deer Cave) என்று அறியப்படும் குகையில் 30 இலட்சம் வௌவால்கள் இருப்பதாகவும்; கரப்பான் பூச்சிக் குகை (Cockroach Cave) என்னும் குகையில் பல இலட்சக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.
சூழலியல்
தொகுபோர்னியோ மழைக் காடுகள் சுமார் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது உலகின் மிகப் பழமையான மழைக்காடுகளில் ஒன்றாகும்.[3] இந்தத் தீவு பல தாவரங்கள் மற்றும் பல விலங்குகளின் பரிணாமமையமாக உள்ளது.
மேலும் அழிந்து வரும் போர்னியோ ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகள் (Bornean orangutan); எஞ்சியிருக்கும் சில இயற்கை வாழ்விடங்களில் இந்தப் போர்னியோ மழைக்காடும் ஒன்றாகும்.
போர்னியோ யானை, கிழக்கு சுமத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros), போர்னியோ மேகச் சிறுத்தை (Bornean clouded leopard), டயாக் பழ வௌவால் உள்ளிட்ட பல உள்ளூர் வன இனங்களுக்கு இது முக்கியமான புகலிடமாக உள்ளது.[4][5]
போர்னியோ ஆற்றுச் சுறா மீன்கள்
தொகுபோர்னியோ காடுகளில் சுமார் 15,000 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. 3,000 வகையான மரங்கள்; 267 சுனை இலை தாவரங்கள் (dipterocarps), 221 வகையான பாலூட்டிகள் மற்றும் 420 வகையான பறவைகள் உள்ளன.[6]
போர்னியோவில் சுமார் 440 நன்னீர் மீன் இனங்கள் உள்ளன.[31] போர்னியோ ஆற்றுச் சுறா மீன்கள் (Borneo river shark) கினாபாத்தாங்கான் ஆற்றில் மட்டுமே இருப்பதாக அறியப் படுகிறது.[7]
நிலவியல்
தொகுபோர்னியோவில் உள்ள உயரமான சிகரங்களின் பட்டியல்
- கினபாலு மலை (Mount Kinabalu) 13,435 அடி (4,095 m)
- துருசுமாடி மலை (Mount Trusmadi) 8,668 அடி (2,642 m)
- முரூக் மியாவ் மலை (Muruk Miau) 6,837 அடி (2,084 m)
- வாக்கிட் மலை (Mount Wakid) 6,778 அடி (2,066 m)
- மொன்கபோ மலை (Monkobo Hill) 5,866 அடி (1,788 m)
- லொத்துங் மலை (Mount Lotung) 5,843 அடி (1,781 m)
- மக்டலேனா மலை (Mount Magdalena) 4,288 அடி (1,307 m)
- தலிபூ மலை (Talibu Hill) 4,144 அடி (1,263 m)
நதி அமைப்புகள்
தொகுநீளத்தின் அடிப்படையில் போர்னியோவில் உள்ள மிக நீளமான நதிகளின் பட்டியல்.
- காப்புவாசு ஆறு (Kapuas River) 1,143 km (710 mi)
- பரித்தோ ஆறு (Barito River) 1,090 km (680 mi)
- மக்காம் ஆறு (Mahakam River) 980 km (610 mi)
- இராச்சாங்கு ஆறு (Rajang River) 760 km (470 mi)
- ககாயான் ஆறு (Kahayan River) 658 km (409 mi)
- மெண்டாவாய் ஆறு (Mendawai River) 616 km (383 mi)
- காயான் ஆறு (Kayan River) 576 km (358 mi)
- கினாபாத்தங்கான் ஆறு (Kinabatangan River) 560 km (350 mi)
- பாராம் ஆறு (Baram River) 400 km (250 mi)
- செம்பாக்குங் ஆறு (Sembakung River) 352 km (219 mi)
- செசாயாப் ஆறு (Sesayap River) 279 km (173 mi)
- பாவான் ஆறு (Pawan River) 197 km (122 mi)
மேற்கோள்
தொகு- ↑ Donna Marchetti (2 August 1998). "Borneo's Wild Side". The New York Times. https://mobile.nytimes.com/1998/08/02/travel/borneo-s-wild-side.html.
- ↑ "Borneo, the third largest island in the world, was once covered with dense rainforests. With swampy coastal areas fringed with mangrove forests and a mountainous interior, much of the terrain was virtually impassable and unexplored. Headhunters ruled the remote parts of the island until a century ago". Mongabay. பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
- ↑ Andy Leeder; Alan Brown; Gregg Coleman; Bob Digby; Glyn Owen; Val Davis (22 August 2016). WJEC GCSE Geography. Hodder Education. pp. 199–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4718-6130-7.
- ↑ "Scientists find dozens of new species in Borneo rainforests". World Wide Fund for Nature. 19 December 2006. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
- ↑ "Borneo wildlife". World Wide Fund for Nature. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
- ↑ MacKinnon, K; et al. (1998). The Ecology of Kalimantan. London: Oxford University Press.
- ↑ Nguyen, T.T.T., and S. S. De Silva (2006). "Freshwater Finfish Biodiversity and Conservation: An Asian Perspective", Biodiversity & Conservation 15(11): 3543–3568
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: போர்னியோ
- பொதுவகத்தில் Borneo தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Environmental Profile of Borneo – Background on Borneo, including natural and social history, deforestation statistics, and conservation news.