நாகரிகத்தின் தொட்டில்

முதன் முதலில் நாகரிகம் உருவான இடங்கள்

நாகரிகத்தின் தொட்டில் என்னும் சொல், தற்போதுள்ள தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் நாகரிகம் உருவானதாகக் கருதப்படும் இடத்தைக் குறிக்கும். தற்காலச் சிந்தனைகளின்படி, நாகரிகத்துக்குத் தனியொரு தொட்டில் கிடையாது. பல நாகரிகங்கள் இணையாக வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றுள் மெசொப்பொத்தேமியாவையும், பண்டைய எகிப்தையும் உள்ளடக்கிய பகுதியே மிகப் பழையது என நம்பப்படுகின்றது.[1] இந்தியாவின் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதி,[2][3] சீனாவின் மஞ்சள் ஆற்றுப் பகுதி[4] போன்ற பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழ்ந்த பண்பாடுகள் மத்தியிலும் பிற நாகரிகங்கள் உருவாகின. அண்மைக் கிழக்கினதும், கிழக்காசியாவினதும் தொடக்ககால நாகரிகங்களிடையே எந்த அளவுக்குச் செல்வாக்குகள் இருந்தன என்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களே நிலவுகின்றன. இடையமெரிக்க நாகரிகங்களும், குறிப்பாக இன்றைய மெக்சிக்கோவில் உருவானவையும், இன்றைய பெரு நாட்டில் உருவான நோர்ட்டே சிக்கோ நாகரிகமும் யூரேசிய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டுத் தனியாகவே உருவானதாக அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.[5]

எழுத்தின் பயன்பாடு, நகரங்கள், வகுப்பு அடிப்படையிலான சமூகம், வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, பொதுக் கட்டிடங்கள், உலோகவியல், பெரிய அளவிலான கட்டிடக்கலை போன்ற பல்வேறு விடயங்களின் அடிப்படையில் அறிஞர்கள், நாகரிகத்துக்கு வரைவிலக்கணம் கூறுகின்றனர்.[6][7] நாகரிகத்தின் தொட்டில் என்னும் தொடர் பல்வேறு பண்பாடுகளுக்கும், பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்மைக் கிழக்கின் செம்புக்காலப் பண்பாடும் (உபெயிட் காலம்) பிறைவடிவச் செழிப்புப் பகுதியும், பண்டைய இந்தியாவும் சீனாவும், இவ்வாறாக அழைக்கப்படுவனவற்றுள் அடங்குகின்றன. தனியான வளர்ச்சி அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருந்தாலும், பண்டைய அனத்தோலியா, லேவன்ட், ஈரானியச் சமவெளி ஆகிய பகுதிகளுக்கும் மேற்கத்திய நாகரிகத்தின் முன்னோடியான பண்டைக் கிரேக்கத்துக்கும் கூட இத்தொடர் பயன்படுகின்றது.—even when such sites are not understood as an independent development of civilization, as well as within national rhetoric.[8]

கருத்தாக்கத்தின் வரலாறு

தொகு

"நாகரிகத்தின் தொட்டில்" என்னும் கருத்துரு விவாதத்துக்கு உரிய விடயமாகவே உள்ளது. ஏதாவது ஒன்று அதன் தொடக்க நிலையில் பாதுகாக்கப்படுகின்ற அல்லது வளர்க்கப்படுகின்ற ஒரு இடம் அல்லது பகுதியை உருவகமாகத் தொட்டிலுக்கு ஒப்பிடுவதை, இசுப்பென்சர் முதலில் பயன்படுத்தியதாக ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி கூறுகிறது. சார்லசு ரோலின்சு என்பவர் 1734 இல் எழுதிய பண்டைய வரலாறு (Ancient History) என்னும் நூலில் "புனித தேசத்தின் தொட்டிலாக முதலில் இருந்த எகிப்து" என்னும் தொடர் காணப்படுகின்றது.

நாகரிகத்தின் எழுச்சி

தொகு

உடலுழைப்பற்ற பண்பாடு உருவாவதற்கான அடையாளங்கள் லேவன்ட் பகுதியில் கிமு 12,000 ஆண்டுக் காலப் பகுதியில் நத்தூபியப் பண்பாடு ஒரு உடலுழைப்பற்ற பண்பாடாக உருவானபோதே காணப்பட்டன. இது கிமு 10,000 இல் ஒரு வேளாண்மைச் சமூகமாக உருவானது.[9] மிகுதியானதும் நிலையானதுமான உணவு வழங்கலை உறுதி செய்வதற்கு நீர் முக்கியம் என்பதும்; வேட்டையாடுதல், மீன்பிடித்தல், தானியங்கள் உட்பட்ட வளங்களைச் சேகரித்த போன்றவற்றுக்கான சாதகமான நிலையும் பல்துறை சார்ந்த பொருளாதாரத்தை வழங்கி நிரந்தரமான ஊர்கள் உருவாவதற்குத் தூண்டின.[10]

பல ஆயிரம் மக்களுடன் கூடிய முதல் முந்திய நகர்ப்புறக் குடியிருப்புக்கள் புதிய கற்காலத்தில் தோன்றின. பல பத்தாயிரம் மக்களைக் கொண்ட முதல் நகரங்கள், கிமு 31 ஆம் நூற்றாண்டில் உருவான "மெம்பிசு", "உருக்" என்பவை.

கடந்த காலத்தின் பதிவுகள் வருங்காலத் தலைமுறையினருக்காக வைக்கத் தொடங்கிய பின்னரே வரலாற்றுக் காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடிந்தது.[11] நாகரிகத்தின் தொடக்கத்தை எழுத்துக்கு முந்திய குறியீடுகளில் இருந்து எழுத்து உருவானதுடன் பொருத்துவதாயின், அண்மைக் கிழக்கில் புதிய கற்காலத்துக்கும், வெண்கலக் காலத்துக்கும் இடைப்பட்ட இடை மாறு காலமான கிமு நான்காம் ஆயிரவாண்டைச் சேர்ந்த செப்புக் காலமும்; கிமு 3300 காலப் பகுதிக்குரிய சிந்துவெளியின் அரப்பாவில் எழுத்துக்கு முந்திய குறியீடுகளின் வளர்ச்சியும் நாகரிகத் தொடக்கத்தைக் குறிப்பதாகக் கொள்ள முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Charles Keith Maisels (1993). The Near East: Archaeology in the "Cradle of Civilization. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-04742-0.
  2. Thorpe, Showick Thorpe Edgar (2009). The Pearson General Studies Manual 2009, 1/e. Pearson Education India.
  3. "Indus River Valley Civilizations". History-world.org. Archived from the original on 2012-06-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.
  4. Cradles of Civilization-China: Ancient Culture, Modern Land, Robert E. Murowchick, gen. ed. Norman: University of Oklahoma Press, 1994
  5. Mann, Charles C. (2006) [2005]. 1491: New Revelations of the Americas Before Columbus. Vintage Books. pp. 199–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-3205-9.
  6. Haviland, William (2013). Cultural Anthropology: The Human Challenge. Cengage Learning. p. 250. {{cite book}}: Unknown parameter |displayauthors= ignored (help)
  7. Understanding Early Civilizations: A Comparative Study, Trigger, Bruce G., Cambridge University Press, 2007
  8. Lin (林), Shengyi (勝義); He (何), Xianrong (顯榮) (2001). 臺灣–人類文明原鄉 [Taiwan — The Cradle of Civilization]. Taiwan gu wen ming yan jiu cong shu (臺灣古文明研究叢書) (in சீனம்). Taipei: Taiwan fei die xue yan jiu hui (台灣飛碟學硏究會). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-957-30188-0-3. இணையக் கணினி நூலக மைய எண் 52945170.
  9. Ofer Bar-Yosef. "The Natufian Culture in the Levant, Threshold to the Origins of Agriculture" (PDF). Columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.
  10. La protohistoire de l'Europe, Jan Lichardus et al., Presses Universitaires de France, Paris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-335-9366-8, 1987, chapter II.2.
  11. Carr, Edward H. (1961). What is History?, p. 108, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-020652-3.