குகை ஓவியம்

குகை ஓவியம் அல்லது பாறை ஓவியம் என்பது, குகைகள், பாறைகள் போன்றவற்றில் வரையப்பட்ட பண்டைக்கால ஓவியங்களைக் குறிக்கும். இவை பொதுவாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. குகை ஓவியங்கள், 40,000 ஆண்டுகள் வரை பழமையான, மேற் பழைய கற்காலக் காலத்திலிருந்தே வரையப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வோவியங்கள் பெரும்பாலும் சமூகத்தின் மதிப்புக்குரிய மூத்தோராலேயே வரையப்பட்டதாக நம்பப்படுகிறது.

வரலாறு

தொகு
 
காளை மாடுகளைக் காட்டும் ஸ்பெயின் நாட்டுக் குகை ஓவியம்

1837 ஆம் ஆண்டில், சர். ஜார்ஜ் கிரே (Sir. George Grey) என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார். ஆனாலும் ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. பின்னர், 1879 ஆம் ஆண்டில் இன்னுமொரு குகை ஓவியக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்டமிரா என்னுமிடத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி குகை ஓவியம் ஒன்றைக் கண்டு பிடித்தாள். இக் கண்டுபிடிப்பின் பின்னரே மானிடவியல், தொல்லியல் போன்ற துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடையே குகை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது.

 
Paintings on Lol-Tun cave from Yucatán

முதன் முதலாக ஐரோப்பாவில் அல்டமிராவில் மக்தலேனியப் பண்பாட்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஒரு ஏமாற்று என்று கல்வியாளர்களால் கருதப்பட்டது. எனினும், பிற்காலத்து மீள் மதிப்பீடுகளும், தொடர்ந்து இடம்பெற்ற புதிய குகை ஓவியக் கண்டு பிடிப்புக்களும், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளன. அத்துடன், மிக எளிமையான கருவிகளைப் பயன்படுத்திய மேற் பழையகற்கால மனிதர்களின் உயர் தரத்திலான கலைத் திறமையையும் அவை வெளிக் கொணர்ந்துள்ளன.

இந்தோனேசிய குகை ஓவியங்கள்

தொகு

இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் வயதைக் கணித்த ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்ஸிமே ஆபோர்ட், இந்த மரோஸ் குகையிலுள்ள ஓவியங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஆண்டுகளாவது வயதிருக்கும் என்று கணித்திருக்கிறார்.

இந்தோனேசிய குகை ஓவியங்களுக்கு சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள் குறைந்தது 13 ஆயிரம் ஆண்டுகளுக்காவது ஓவியங்களை வரைந்துவந்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடிகின்றது. [1]

குகை ஓவியங்கள் அவை வரையப்பட்ட கால கட்டங்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கான பெறுமதியான தகவல்களையும் தருகின்றன.

ஆஸ்திரேலியக் குகை ஓவியங்கள் சில:

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141012_indonasian_cave_paintings

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகை_ஓவியம்&oldid=3829604" இலிருந்து மீள்விக்கப்பட்டது