இந்தியாவின் ஊராட்சி மன்றம்

ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து அரசு, Panchayath Raj) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கித்தான், நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம், பேரவை அல்லது கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல்.

கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் எனப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது.

பஞ்சாயத்து அரசு என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராச்சு கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அல்லது சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

அறிமுகம்

தொகு

கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில், 73-ஆவது திருத்தமாக 1992-இல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின்படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகாரப் பரவலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11-ஆவது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.

நிதி

தொகு
    • ஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.
    • உள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.
    • மைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.
    • மாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.

வரலாறு

தொகு

ஊராட்சி மன்றம் ஏப்ரல் 24, 1993-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 1992, 73-ஆவது திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. டிசம்பர் 24, 1996 பழங்குடியினர் வாழும் பகுதிகளான எட்டு மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத்து, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் இராஜஸ்தான்) விரிவுபடுத்தப்பட்டது.

பிற இந்திய மொழி பெயர்கள்

தொகு

மத்திய இந்தியாவில் பஞ்சமண்டலிகள்
பீகாரில் கிராம சென பாதங்கள்
இராஜஸ்தானில் பஞ்ச குலங்கள் என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

ஊராட்சி மண்றத்தின் பணிகள்

தொகு

ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள்[1]

  1. தெரு விளக்குகள் அமைத்தல்.
  2. ஊர்ச் சாலைகள் அமைத்தல்
  3. குடிநீர் வழங்குதல்.
  4. கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
  5. சிறிய பாலங்கள் கட்டுதல்.
  6. வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
  7. கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
  8. தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
  9. இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஆறாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 160

வெளிப்புற இணைப்புகள்

தொகு